தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் மரக்காணத்தில் மத்திய அரசின் சட்ட ஆலோசகர் , தேசியத் தலைவர் முனைவர் பி. இராமஸ்வாமி அவர்கள் முன்னிலையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தேசிய பொதுச் செயலாளர்
வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள்,
தஞ்சை மாவட்டத் தலைவர் கே.மகேந்திரன், மண்டலத் தலைவர் K.R.G. ராஜா
மாநிலக் கொள்கை பிரச்சார அணி செயலாளர் கரந்தைக்கண்ணன்,
தஞ்சை மாவட்ட நிர்வாகி
சக்திவேல் ஆகியோரும்,
தமிழ்நாடு மாநில தலைவர் ஆதி நெடுஞ்செழியன், மற்றும் துரை கோவிந்தராஜன், வி.எஸ் இளங்கோவன், பாலமுரளி ,
தேசிய அமைப்புச் செயலாளரும்
புதுச்சேரி மாநிலத் தலைவருமான
வைஜெயந்தி ராஜன்
காரைக்கால் மாவட்டச் செயலாளர் ஐயப்பன் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்
அக்டோபர் மாதம் 11ஆம் தேதி அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற
தஞ்சாவூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில்
புதுச்சேரி மாநிலத் தலைவரும்
தேசிய அமைப்பு செயலாளருமாக
உள்ளவரை அவை நாகரீகம் இன்றி, பொதுவிடத்தில்
தமிழ்நாடு மாநில தலைவர் ஆதி நெடுஞ்செழியன் அவர்கள் அவமரியாதையாக
பேசியது குறித்து
அனைவரிடத்திலும்
கருத்து கேட்கப்பட்டது.
நிறைவாக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அவர்கள்,
தான் அவ்வாறு அன்று
பேசியது தவறு தான் என்றும், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அனைவரும் முன்னிலையிலும் தெரிவித்தார்.
மேலும் இவ் அமைப்பிலிருந்து விலகுவதாகவும், தெரிவித்துக் கொண்டார்.
அவருடைய விலகுதலை ஏற்றுக் கொண்டு தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பிலிருந்து அவர் அக்கணத்திலிருந்தே விடுவிக்கப்படுகிறார்
என்று இதன் மூலம் தேசியப் பொதுச் செயலாளர் அவர்களால்
அறிவிக்கப்படுகிறது. தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள்
அவருடன் இணைந்து வருங்காலத்தில் செயல்படுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களும்
விடுவிக்கப்படுவார்கள் என்றும், அறிவுறுத்தப்படுகிறது.
விரைவில்,ஓரிரு நாட்களில் , தேசிய தலைவர் வழிகாட்டுதலுடன்
தமிழ்நாட்டின்
மாநிலத் தலைவர் நியமனம் செய்யப்பட்டு
அறிவிக்கப்படுவார் என்றும் அறிக்கை விடப்படுகிறது.
இவண்,
சந்திரபோஸ் பெருமாள்
வழக்கறிஞர்
தேசிய பொதுச்செயலாளர்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு.