புதுச்சேரி மாநில முதல்வர் ஐயா ரங்கசாமி அவர்களை தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய மாநில நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது

0 366

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி வைஜெயந்தி ராஜன் , தமிழ்நாடு மாநிலத் தலைவர் டி .ஆர் .எஸ் திருமலை செந்தில், மாநில பொதுச் செயலாளர் என். டி கண்ணன், மாநில பொருளாளர் ஆர். வைரமுத்து, மாநில வழக்கறிஞர் அணித் தலைவர் S . தமிழ்வேந்தன், மாநில இளைஞரணி தலைவர் எம்.சிவகுமார், ஆகியோர் மரியாதை நிமித்தமாக புதுச்சேரிமாண்புமிகு முதல்வர் என். ரெங்கசாமி அவர்களை அவரது இல்ல வளாகத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி சித்தர் திருக்கோவிலில் சந்தித்தோம்

.

நமது திருக்கோவில் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முனைவர். பி. இராமஸ்வாமி அவர்கள் தலைமை,தேசியப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் அவர்கள் செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாட்டின் புதிய நிர்வாகிகளின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்தும் முதல்வரிடத்தில் தெரிவித்தோம்.

மேலும் நமது கோவில் முரசு மாத இதழை மாண்புமிகு முதல்வர் இடத்தில் அளித்தோம். அவர் இதழைப் பிரித்து ஒரு சில பக்கங்களைப் பார்த்துப் பாராட்டியது மிகவும் பெருமையாக இருந்தது. புதுச்சேரி மாநில நிர்வாகிகள் பற்றியும் விரைவில் புதுச்சேரி மாநில தலைமை நிர்வாகிகள், புதுச்சேரி காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் அவரைச் சந்திக்க இருப்பது பற்றியும், மத நல்லிணக்க் அணியின் மாநிலத் தலைவராக உள்ள மேனாள் நல வழித்துறை அமைச்சர் திருமிகு ஏ.எம்.எச்.. நாஜிம் அவர்கள், புதுச்சேரி மாநில ஆலோசகர் திரு எம்.சிவசங்கர் எம். எல். ஏ அவர்கள் பற்றியும் குறிப்பிட்டோம். நிர்வாகிகள் அனைவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மரியாதை செய்தனர். சிறந்த ஆன்மீகவாதியான புதுச்சேரி மாண்புமிகு முதல்வர் அவர்கள் நம் கூட்டமைப்பு தொடர்ந்து செயல்பட வாழ்த்து தெரிவித்து ஆசீர்வாதம் செய்தார். தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் எதிர்காலப் பணிகளுக்கு கூடுதல் ஊக்கமளித்தது போல மனநிறைவைத் தந்தது என நிர்வாகிகள் கலந்துரையாடி மணமகிழ்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.