தமிழ்நாடு மாநில தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பு ​துணைத்தலைவராக திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள் நியமனம்

0 346

தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர், மத்திய அரசின் சட்ட ஆலோசகர் பி.இராமசுவாமி அவர்கள் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களின் கலந்து ஆலோசனையின்படி தமிழ்நாடு மாநிலத் தலைவர் டி.ஆர்.எஸ்.திருமலை செந்தில் அவர்களின் பரிந்துறையின் பேரில் திருப்பாச்சி, திருப்பதி, தர்மபுரி போன்ற வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் பேரரசு அவர்களின் இசைவுடன் தமிழ்நாடு தேசியத்திருக்கோயில்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக நியமனம் செய்யும் நிகழ்வு சென்னையில் 18.12.2025 அன்று நடைபெற்றது.

​கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜெயந்திராஜன், தமிழ்நாடு தலைவர் டி.ஆர்.எஸ்.திருமலை செந்தில், மாநில பொதுச்செயலாளர் என்.டி.கண்ணன், மாநிலப் பொருளாளர் ஆர்.வைரமுத்து ஆகியோர் துணைத் தலைவருக்கான நியமன ஆணையை இயக்குநர் பேரரசு அவர்களிடத்தில் வழங்கி பூங்கொத்து புத்தகம் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர் மற்றும் மாநில மத நல்லிணக்க அணித் தலைவர் ஆல்பர்ட் அந்தோணி, மாநில இளைஞர் அணித் தலைவர் எம்.சிவக்குமார், மாநில செயலாளர் பி.ஜெகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து மரியாதை செய்தனர்.


​படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோதும் இயக்குநர் பேரரசு அவர்கள் தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கி கூட்டமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விபரமாக ஆர்வத்துடன் கேட்டறிந்தது குறித்து நிர்வாகிகள் அனைவரும் பெருமகிழ்வு அடைந்தனர்.
​சிறந்த ஆன்மீகவாதியும், சமூக சீர்திருத்த கொள்கைகளின் பிடிப்புள்ளவருமான இயக்குநர் பேரரசு அவர்கள் தமிழ்நாடு மாநில தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக நியமனம் செய்துள்ள தமிழ்நாடு மாநிலத் தலைவர் டி.ஆர்.எஸ்.திருமலை செந்தில் அவர்களின் செயல்திட்டத்தில் திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.