மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பாராட்டு

0 238

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜயந்தி ராஜன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு ASPS ரவி பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருநள்ளாறு தர்பார்ணேஸ்வரர் திருக்கோவிலில் நுழைவு வாயில்,முன்மண்டபம் ஆகிய இடங்களில் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தி இருப்பதாகவும், இதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நோய் தொற்று தடுக்கும் கிருமிநாசியாக பயன்படுவதாகவும் ஊடகங்களின் வழியாக இந்நடைமுறையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர், மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முனைவர் பி. இராமஸ்வாமிஅவர்கள், தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்கள், தேசிய செயலாளர் சு.பா. ஞான சரவணவேல் ஆகியோர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ASPS ரவி பிரகாஷ் அவர்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது .வழிகாட்டுதலின் படி இம்முறையை நடைமுறைப்படுத்தி வரும் திருநள்ளாறு தர்பார்ணேஸ்வரர் திருக்கோவில் கோவில் நிர்வாகி ஆர் சுப்பிரமணியன் அவர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் அறிவியலும் ஆன்மீகமும் கலந்த இந்த அருமையான செயல்பாட்டை புதுச்சேரி தமிழ்நாடு மட்டும் இன்றி மற்ற மாநிலங்களிலும் உள்ள பக்தர்கள் அதிகம் கூடும் திருக்கோவில்களில் இந் நடைமுறையை பின்பற்றினால் திருக்கோயில்களின் சுகாதாரமும், முக்கியமாக பக்தர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட தேசிய திருக் கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் எஸ். திருமுருகன் பொதுச்செயலாளர் முனைவர் இரா. அசோக் குமார் ஆகியோருடன் மாவட்ட மண்டல நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில் நிர்வாகி அவர்களையும் நேரில் சந்தித்துப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க உள்ளனர். திருக்கோவில்களைக் காக்கவும், பக்தர்களின் நலம் பேணவும் பொதுமக்களும் ஆன்மீக அன்பர்களும் ஒத்துழைப்பு தர வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளப் படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.