திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் … மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜெயந்தி ராஜன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களும், தேசிய செயலாளர் சு.பா .ஞான சரவணவேல் அவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வு நீதிபதிகள் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பாராட்டி நீதித்துறையின் உரிமையும் சுதந்திரமும் காக்கப்பட்டுள்ளது. இதற்காக பெருமைப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
அதன் முழு விவரமானது: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு தொடர்பாக செய்த செய்த மேல்முறையீடு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து,திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டது செல்லும் என்றும் அமர்வு நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகைதீபம் ஏற்றலாம் என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளனர் மலையில் உள்ள தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது. தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல்துறை, தொல்லியல் துறை தேவஸ்தானம் முடிவு செய்யலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர் என்றும் இதை பெரிதும் வரவேற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.