தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் புதுச்சேரி யூனியன் பிரதேசக் பார்வையாளராக தமிழ்நாடு பொதுச் செயலாளர் திரு.N.T. கண்ணன் அவர்கள் நியமனம்
தேசியத் திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி வைஜெயந்திராஜன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ,மத்திய அரசின் சட்ட ஆலோசகர்
முனைவர் பி. இராமஸ்வாமி அவர்கள் வழிநடத்தலுடன் தேசிய பொதுச்செயலாளர் சந்திர போஸ் பெருமாள் அவர்கள் மற்றும் தேசிய செயலாளர் சு.பா. ஞான சரவணவேல் அவர்கள் ஆகியோரின் பரிந்துரையுடன் புதுச்சேரி யூனியன் பிரதேச திருக்கோவில்கள் கூட்டமைப்பின் பார்வையாளராக தமிழ்நாடு மாநில தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு.N.T. கண்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிவிக்கப்படுகிறது. அவரும் இசைந்து
ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமை நிர்வாகிகள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மண்டல நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.