புதுச்சேரி மூகாம்பிகை நகர் மூகாம்பிகை திருக்கோவிலில் நடத்தப்பட்ட புதுச்சேரி மாநில ,புதுச்சேரி காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம்

0 156

புதுச்சேரி மூகாம்பிகை நகர் மூகாம்பிகை திருக்கோவிலில் நடத்தப்பட்ட புதுச்சேரி மாநில ,புதுச்சேரி காரைக்கால் மாவட்ட
நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில்

ஏக மனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை
18. 12. 2025 அன்று புதுச்சேரியின் மாண்புமிகு முதல்வர் என் ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து அளித்தனர் . புதுச்சேரி
தேசிய திருக்கோவில் கூட்டமைப்பினைப் பற்றியும், தேசியத் தலைவர் மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முனைவர் பி இராமசாமி அவர்கள் தலைமையின் வழிகாட்டல், மற்றும் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்கள் செயல் திட்டங்கள் பற்றியும் தேசிய அமைப்புச் செயலாளரும், மாநிலத்
மாநிலத் தலைவருமாகிய வைஜெயந்தி ராஜன் அவர்கள் விவரமாக எடுத்துக் கூறினார் .


மிக முக்கியமான தீர்மானங்கள் ஆன புதுச்சேரி மாநிலத்தில் திருக்கோயில்களுக்கு அறங்காவலர் குழு அமைக்கும் போது,
அந்தந்தப் பகுதிகளில்*உள்ள திருக்கோயில்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளில் இருவரை அறங்காவலர் குழுவில்
இடம்பெறச் செய்ய வேண்டும்,  நலிவடைந்த கோயில் களின் அர்ச்சகர்கள்,
பணியாளர்கள் ஆகியோருக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை தாமதமின்றி  வழங்குவதற்கு அரசு நிதி உதவி செய்தல் வேண்டும்.

கோவில்கள்தோறும் உழவாரப் பணிகள் போன்றப் பணிகளை தன்னார்வத்துடன்
செய்வதற்கு முன் வரும் திருக்கோயில் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு அரசு உரிய அங்கீகாரம் அளித்தல் வேண்டும் என்பதைப் பற்றியும் முதல்வர் அவர்களிடத்தில் எடுத்து சொல்லப்பட்டது. இச் சந்திப்பின்போது மாநில பொதுச் செயலாளர் கே. விஜயராஜ், செயலாளர் வி. தங்கம், மாவட்டத் தலைவர் த.மகாலிங்கம் மாநில நிர்வாகிகள் திருமூர்த்தி ,
ராகவப் பெருமாள் சாமி , மாவட்ட நிர்வாகிகள் விஸ்வநாதன்,சுந்தரமூர்த்தி,சத்தியசீலன், மஞ்சுளா தேவி ,மண்டலத் தலைவர்
, தொழிலதிபர் சங்கர் , ஆகியோர் உடன் இருந்தனர். முதல்வர் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.


மாண்புமிகு முதல்வர் அவர்கள் நமது கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவில் ஆவண செய்வதாக உறுதியளித்
தார். மேலும் நம் நிர்வாகிகளுக்கு தொடர்ந்து ஆன்மீக சேவை செய்வதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.