கடை தெருவில் வடிகாளை அமைத்து தர வேண்டும் வணிகர் சங்கங்கள் கோரிக்கை
வேதாரண்யம் வட்டம் தாணிக் கோட்டகம் ஊராட்சி கடை தெருவில் உள்ள வடக்கு பேருந்து நிலையம் அருகில் வடிகால் சீரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறைக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது 16.10.2025 இன்று ஒரு மணி நேரம் மழையிலே வடிகால் அடைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீர் புகும் அபாயத்தில் உள்ளது பேருந்துக்கு நிற்பவர் கூட தண்ணீரில் படகு சவாரி செய்யும் சூழ்நிலையில் உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து இதில் கவனம் செலுத்தி உடனே தீர்வு காண வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். தவறும் பட்சத்தில் தாணிக்கோட்டகம் வணிகர் சங்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் சாலை மறியலும் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் . வணிகர்கள் மற்றும் வணிகர் நல சங்ககளின் பேரவை கடைத்தெரு தாணிக்கோட்டகம்