திருச்செந்தூர் முருகப்பெருமான் திருக்கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் துப்புரவு பணியாளர்கள் முதல் காவலாளிகள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக பணி அமர்த்த படவேண்டும் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

0 117

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் விடுத்த அறிக்கையில,  திருச்செந்தூர் முருகப்பெருமான் திருக்கோயில்கள் உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் வருகை புரியும் திருக்கோயில்களிலும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் காவலாளிகள் நேரடியாக நியமனம் செய்யாமல் தனியார் கம்பெனிகளுக்கு டெண்டர் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து அதன் பிறகு ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் தூய்மை பணியாளர்களையும் மற்றும் காவலாளிகளையும் நியமனம் செய்கின்றார்கள். அதன் நடைமுறையே இதனால் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் பெரும் நிறுவனங்கள் திருக்கோயில்களின் ஆகம விதிகளை தெரிந்த இந்து மதத்தினரையே பணியாளர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் தற்பொழுது இந்து மதம் இல்லாதவர்களையும் பணியில் அமர்த்தப்பட்டு வருகிறது இதனால் அவர்கள் மதியம் உணவிற்கு இறைச்சி போன்ற உணவுகளை எடுத்து வந்து கோயில் பிரகாரத்திலேயே உணவருந்துவதும் ஆகம விதிகளுக்கு எதிரான செயல்பாடுகளும் நடைபெற்று வருகிறது இதனை நியமனம் செய்யும் நிறுவனங்களும் கண்டு கொள்வதில்லை இதனால் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் இதனை பார்த்து புனிதமாக கருதப்படும் நமது திருக்கோயில்கள் இப்படி செயல்பாடுகள் நடைபெறுவதை மனதளவில் பக்தர்களுக்கு புண்படுமான செயல்பாடாகவே உள்ளது எனவே திருக்கோயில்கள் என்பது புனிதமான இடமானது இதனை புனிதத் தன்மை கெடாமல் பார்த்துக் கொள்வது நமது கடமையாகும் எனவே துப்புரவு மற்றும் காவலாளி பணிகளுக்கு ஒப்பந்தம் இறை பணி மற்றும் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு இது போன்ற ஒப்பந்தங்களை அளிக்கப்பட வேண்டும் மேலும் ஒப்பந்தங்களில் இந்து மதத்தை சார்ந்தவர்களே பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் அமர்த்தபட்ட பணியாளர்களுக்கு திருக்கோயில்களின் ஆகம விதிகளை பயிற்சி தரப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பாகவும் பக்தர்கள் சார்பாகவும் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கிறது

Leave A Reply

Your email address will not be published.