ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாக துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ தீபத்தை இந்த நாளில் ஏற்ற வேண்டும்
நம் ஒவ்வொருவரும் பிறவி எடுத்ததற்கு முக்கியமான காரணமாக திகழ்வது நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகள். அந்த முன் ஜென்ம கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நம்முடைய ஜாதகமும் அமையும். அப்படி அமையக்கூடிய அந்த ஜாதகத்தில் பலருக்கும் பலவிதமான தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். ஜாதகத்தை அலசி ஆராயாமல் பிரச்சினையை மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு வித வெறுப்பே உண்டாக்கும். தொடர்ச்சியாக ஒரே விஷயத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க கூடியவர்கள் முதலில் தங்களுடைய ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் கொடுத்து ஜாதகத்தை ஆராய செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு விதமான தோஷத்திற்கும் ஒவ்வொரு விதமான பரிகாரங்களையும் வழிபாடுகளையும் ஜோதிடர் கூறுவார். ஒருவருக்கு ஒரு தோஷம் தான் இருக்கும் என்று கூற முடியாது. பலதரப்பட்ட தோஷங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷத்தை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கு துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் இந்த நாட்களில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்க
பொதுவாகவே துர்க்கை அம்மன் வழிபாடு என்றதும் நம் நினைவிற்கு வருவது ராகு காலத்தில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவது தான். அதிலும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் தான் இந்த ராகுகால வழிபாட்டை பலரும் மேற்கொள்வார்கள். அதிலும் பெண்கள் இந்த வழிபாட்டை செய்வார்கள். பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், படிக்கின்ற பிள்ளைகளாக இருந்தாலும், தங்களுக்கு ஏற்படக்கூடிய தொடர்ச்சியான சிக்கலை நீக்குவதற்கு துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமையிலும் வியாழக்கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் ராகு காலத்தில் தான் வழிபாடு செய்ய வேண்டும்.
எப்பொழுதும் போல் ராகு காலத்தில் ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி அதை இரண்டாக நறுக்கி அதன் சாறை தனியாக எடுத்துவிட்டு எலுமிச்சம் பழத்தை திருப்பி போட்டு எலுமிச்சம் பழத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம் நீங்குவதற்கு கூடுதலாக இதில் மூன்றே மூன்று மிளகை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு விளக்கிலும் மூன்று மிளகு வீதம் சேர்த்து தீபம் ஏற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும்பொழுது ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அது நிவர்த்தி அடையும். சாதாரண தோஷமாக இருக்கும் பட்சத்தில் ஒன்பது வாரங்களும் அதிகப்படியான தோஷங்கள் இருக்கும்போது அதற்கேற்றார் போல் வாரங்களை அதிகரித்து முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இந்த தீபத்தை ஏற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் விலகக்கூடிய அற்புதமான துர்க்கை அம்மனை இந்த நாளில் சென்று வழிபாடு செய்ய நம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களையும் நீக்குவாள்
அன்பே சிவம்