தஞ்சாவூர் திட்டை குரு பகவான் ஸ்தலத்தில் கட்டண கொள்ளை
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இத் திருக்கோயில் குரு பகவானின் பரிகார ஸ்தலமாகவும் புகழ்பெற்றது இத்திரு கோயிலுக்கு பக்தர்கள் உள்ளூர் இல்லாமல் வெளியூரில் இருந்து பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றார்கள் இத்திருக்கோவில் குரு பரிகார ஸ்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இத்திரு கோயிலுக்கு வெளி மாவட்டம் வெளி மாநிலத்திலிருந்து பக்தர்கள் குரு பகவானை தரிசிக்க வருகை புரிகின்றார்கள் இத்திரு கோயில் இந்து அறநிலை துறையின் நிர்வாகத்தின் கீழ் அனைத்து விதமான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கடுமையான அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது இந்தக் கட்டணங்கள் கோயிலின் வாயிலில் அட்டவணை படுத்தப்படவில்லை மேலும் கோயிலுக்கு உள்ளேவே கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது இதனால் பக்தர்களுக்கு பெரும் இடையூறையும் திருக்கோயிலின் அழகு சீர்குலைக்கப்பட்டுள்ளது அர்ச்சனை பொருள்களின் கடைகளில் விலைகள் தாறுமாறாக விற்பனை செய்யப்படுகிறது எனவே கோவில் நிர்வாகம் கோயிலுக்கு உள்ளே உள்ள கடைகளை வெளியில் அமர்த்தி பக்தர்கள் இடையூர் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் மேலும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணத்தின் நிலைப்பாட்டை கோயிலின் வாயிலில் அட்டவணை படுத்த வேண்டும் மேலும் அர்ச்சனை பொருள்கள் விலை பட்டியலை அட்டவணை படுத்த வேண்டும் எனவும் காசு உள்ளவர்களுக்கு முன்னுரிமையும் பணம் இல்லாதவர்களுக்கு நீண்ட வரிசையிலையும் என பக்தர்கள் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றாமல் தரிசனம் வழங்கப்படுகிறது இதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தப்படுகிறது திருக்கோயில்கள் வியாபார ஸ்தலமாக பார்க்காமல் ஆன்மீக ஸ்தலமாக வேறுபாடு இல்லாமல் தரிசன நடைமுறையை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது இங்கனம்
வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் பொதுச் செயலாளர் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு