தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் திருவாசகம் பாடிய சிவனடியார்களை அவமரியாதை செய்த கோயில் நிர்வாகத்திற்கு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கண்டனம் (Video இணைப்பு)
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளி அன்று பல ஆண்டுகளாக திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது இந்நிகழ்ச்சி அந்தப் பகுதியில் உள்ள சிவனடியார்களால் மற்றும் பக்தர்களால் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது
17 10 2025 அன்று திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடத்த காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு சென்ற பக்தர்களையும் சிவனடியார்களையும் அங்குள்ள கோவில் நிர்வாகத்தினர் விரட்டி அடித்ததோடு இல்லாமல் அவர்களை அவமரியாதை செய்துள்ளனர் மேலும் இங்கு திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி எல்லாம் இங்கு நடைபெற கூடாது எனவும் நீங்கள் எங்கு போய் வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள் இங்கு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தகாத வார்த்தைகளில் மரியாதை குறைவாக பேசி சிவனடியார்களையும் பக்தர்களையும் விரட்டி அடித்துள்ளார்கள் இதுபோன்ற நிகழ்வு இந்து பக்தர்களின் மனதை புண்படுத்திய செயலாக கருதப்படுகிறது எனவே கோவில் நிர்வாகம் இவர்களை தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என சிவனடியார்கள் இறை பக்தர்கள் மற்றும் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது சிவனடியார்களை அவமரியாதை செய்த கோவில் நிர்வாகத்தினர்க்கு கண்டனத்தையும் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக அதன் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது