நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் திருமண தடை இருக்க கூடிய ஒவ்வொருவரும் கந்த சஷ்டி விரதத்தின் ஆறாம் நாள் இந்த முறையில் வழிபாடு செய்ய விரைவிலேயே திருமணம் கைகூடும்.

0 89

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் என்ற ஒரு பந்தத்தில் இணைந்து குடும்பம் என்ற ஒரு அழகான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை என்பது பலருக்கும் இன்றைய காலத்தில் எட்டாத கனியாகவே இருக்கிறது. அதற்கு ஜாதக ரீதியான காரணங்களும் ஒன்றாக இருந்தாலும் மன பொருத்தம் போன்ற பல விஷயங்களுக்காக திருமணம் ஏதோ ஒரு ரூபத்தில் தள்ளிக்கொண்டே சென்றிருக்கும். அப்படிப்பட்டவர்கள் முருகப்பெருமானை கந்த சஷ்டி விரதத்தின் ஆறாம் நாள் வழிபாடு செய்வதன் மூலம் விரைவிலேயே அவர்களுடைய திருமணத்தடை விலகி திருமண யோகம் உண்டாகும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருமண யோகத்தை தரும் கந்தசஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம் என்பது ஆறு நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளக்கூடியது. ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் ஆறாவது நாளான சூரசம்கார நாளன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அதோடு கந்தசஷ்டி விரதம் பூர்த்தி அடைந்து விட்டதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அதற்கு மறுநாள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதோடு தான் முருகப்பெருமானின் இந்த கந்த சஷ்டி திருவிழா நிறைவடைகிறது. திருக்கல்யாணத்தில் கலந்து கொள்பவர்க்கு அவர்களுடைய வாழ்க்கையில் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டாலும் கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் விரதம் இருந்து திருக்கல்யாணத்தை பார்க்கும் பொழுது அதன் முழு பலனையும் பெற முடியும்.

திருமணம் தடைப்பட்டு இருக்கக்கூடிய ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஒருவேளை அவர்களால் இந்த வழிபாட்டை செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் அவர்களுடைய தாய் இந்த வழிபாட்டை செய்யலாம். இதற்கு யாருக்கு திருமணம் தடைப்பட்டு இருக்கிறதோ அவர்களுடைய ஜாதகத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கந்த சஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான அக்டோபர் மாதம் 27ஆம் நாள் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஜெராக்ஸ் எடுத்த இந்த ஜாதகத்தின் நான்கு மூலைகளிலும் மஞ்சளை தடவி வைக்க வேண்டும். பிறகு இந்த ஜாதகத்திற்கும் மேல் விரலி மஞ்சள் கட்டிய ஒரு மஞ்சள் கயிறை வைத்து முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

அன்றைய தினம் மாலை நேரத்தில் சூரசம்காரம் நடைபெறும் பொழுது நாம் நம்முடைய வீட்டில் எப்பொழுதும் போல் முருகப் பெருமானுக்கு பூஜை செய்வோம் அல்லவா அப்படி பூஜை செய்யும் பொழுது முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அந்த அர்ச்சனை செய்யக்கூடிய மலர்கள் இந்த ஜாதகத்திலும், ஜாதகத்தின் மேல் இருக்கக்கூடிய மஞ்சள் கயிற்றிலும் விழும்படி முருகப்பெருமானின் பாதத்திற்கு கீழ் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை கட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

மறுநாள் திருக்கல்யாணம் நடக்கக்கூடிய நேரத்தில் ஜாதகத்தையும் மஞ்சள் கயிறையும் எடுத்துக்கொண்டு எந்த ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறதோ அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு திருக்கல்யாணம் நடக்கக்கூடிய நேரத்தில் அங்கு இருக்கக்கூடிய தல விருட்சத்தில் இந்த மஞ்சள் கயிறை முழு பக்தியோடு கட்ட வேண்டும். ஜாதக பேப்பரை எடுத்து நம்முடனையே வைத்துக் கொள்ளலாம். திருக்கல்யாணத்தை தரிசனம் செய்து விட்டு விரதத்தை பூர்த்தி செய்து வீடு திரும்ப வேண்டும். இந்த முறையில் வழிபாடு செய்து முடித்த பிறகு வரன் பார்ப்பதற்காக ஜாதகத்தை தரும் பொழுது முருகப்பெருமானின் பாதத்தில் நாம் வைத்து வழிபாடு செய்த அந்த ஜாதகத்தை தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு முயற்சி செய்தாலும் திருமணம் என்பது தெய்வங்களால் நிச்சயிக்கப்படக்கூடிய ஒன்று என்பதால் திருமண தடையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் முருகனின் திருக்கல்யாண சமயத்தில் இப்படி வழிபாடு செய்து விரைவிலேயே திருமண பந்தத்தில் இணையலாம்

காயத்ரி மந்திரம்
“ஓம் ஸுந்தர வல்யை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்”.!

Leave A Reply

Your email address will not be published.