தேசியப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திர போஸ் பெருமாள் விடுதலை வீரர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களின் பெயரர் புதுச்சேரி ர்மேஷ்பாபுவை சந்தித்தபோது
புதுச்சேரி
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பில் 2025 டிசம்பர் இரண்டாம் வார நிகழ்வுகள்.
மகளிர் அணி பாராயணம் – புதுச்சேரி ரெட்டியார்பாளையம் (06-12-2025)
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் மூகாம்பிகை நகரில் அமைந்துள்ள அ/மி மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில்
சியாமளா மகளிர் அணியினர் பாராயணத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்த காட்சி கண்டு மிகவும் பெருமைப்படுகிறோம். இக்கோவிலின் அறங்காவல் குழுத் தலைவரான, தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் புதுச்சேரி மாவட்ட பொதுச் செயலாளர், மரியாதைக்குரிய தோழர் N. விஸ்வநாதன் அவர்கள் இங்கு பதிவிட்டு இருப்பது கண்டு மிகவும் பாராட்டி மகிழ்கிறோம்.
நமது புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுச் செயலாளர் K. விஜயராஜ் அவர்கள் இத்திருக்கோயிலின் அறங்காவல் குழு செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நம் கூட்டமைப்பைச் சார்ந்த புதுச்சேரி யூனியன் பிரதேச , மாவட்டப் பொதுச் செயலாளர்கள் இத்திருக்கோயிலின் நிர்வாகப் பணியில் இருப்பது நம் கூட்டமைப்பிற்கு மேலும் பெருமையைத் தருவதாகும். மிகச் சிறப்பாக பாராயணம் செய்யும் “சியாமளா மகளிர்” அணியினருக்கும் வாழ்த்துகள்.
மூலிகை கஞ்சி – நாகை மாவட்டம் திருமறைக்காடு (07-12-2025)
நாகை மாவட்டம் திருமறைக்காடு (சமஸ்கிருதத்தில் வேதாரண்யம்) வட்டம் தாணிக் கோட்டகம் மற்றும் வெள்ளிக்கிடங்கு பகுதி. தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு வேதை மண்டலம் சார்பாக, வேதை மண்டல பிரச்சார குழு தலைவர் பஞ்சநதிக்குளம் மற்றும் அகஸ்திய சன்மார்க்க சங்க நிறுவனர்

சத்திய சிவம் அய்யா அவர்களின் தயாரிப்பில் மூலிகை கஞ்சி ஞாயிறுதோறும் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் நாகை N.T.கண்ணன் அவர்கள் தலைமையில் வழங்கப்படுகிற நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நண்பர்கள் அனைவரும் இறைவனின் அருளைப் பெற்று வளமோடு, நலமோடு வாழ வேண்டும்.
இயக்குனர் பேரரசு – நம்மோடு இணைந்தார் (07-12-2025)
தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பிறந்து, ஊர் பெயரிலேயே படங்களை எடுத்த ஒரே இயக்குனர் (திருப்பாச்சி, சிவகாசி,திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி) என்ற பெருமைக்குரியவர். இப்படிப்பட்ட இயக்குனர் ஒருவரை நமது மாநிலத் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று நமது மாநில தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல இயக்குனர் மற்றும் நடிகர் பேரரசு. அண்ணாரை சென்னையில் சந்தித்து நமது தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் செயல்பாடுகளை எடுத்து கூறினோம். முழு மனதோடு நம்மோடு இணைந்து ஆன்மீக பணியாற்ற காத்து இருப்பதாக கூறியுள்ளார்.
சந்திர போஸ் பெருமாள் + இரமேஷ்பாபு சந்திப்பு (08-12-2025)
தேசியப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திர போஸ் பெருமாள் அவர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுச்செயலாளர்கள் K.விஜயராஜ், S.N.கலைவரதன், புதுச்சேரி மாவட்ட த் தலைவர் த. மகாலிங்கம், விடுதலை வீரர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களின் பெயரர் புதுச்சேரி ர்மேஷ்பாபு ஆகியோரைக் சந்தித்து கூட்டமைப்பின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள், பற்றிக் கலந்துரையாடினார்.
263 ஆம் நாள் பசிப்போக்கும் பாசமலர் கூட்டம் சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது (10-12-2025)
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
7 ஆம் நாள் தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு பசிப்போக்கும் பாசமலர் கூட்டம் சார்பாக அருட்கஞ்சி வழங்கப்பட்டது (10-12-2025)
![]() |
![]() |
![]() |
~~~~~~~*********~~~~~~~*********~~~~~~~*********~~~~~~~
– Dr. ஆ.சி.க. செந்தில்
B,Sc.,(Maths), GNIIT(Software-Multimedia Development), ADCHM, DWD, MAcu., International MBA (IT), Software Testing
நிர்வாக இயக்குனர் – ஆன்மீக மாத இதழ் கோவில் முரசு
மேலும் இதுபோன்ற கட்டுரைகள் வேண்டுமா? உங்கள் கருத்துகளை பகிரவும் மற்றும் கோவில் முரசு ஆன்மீக மாத இதழுக்கு சந்தா கட்டி பயன்பெறவும். வருடத்திற்கு வெறும் ரூ.400 மட்டுமே.
Simply scan the QRCODE seen in the below image, complete the payment and subscribe.









