தஞ்சாவூர் பெரிய கோயிலில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிட கட்டணங்கள் நிர்வாகத்தை தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு மாற்றம் செய்யக்கூடாது தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
உலக அளவில் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பெருவுடையாரை தரிசிக்க தினந்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இறையன்பர்கள் பொதுமக்கள் தரிசிக்க வருகிறார்கள் தஞ்சாவூர் பெரிய கோவில் இந்திய அரசின் தொல்லியல் துறையில் பாதுகாப்பிலும் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது அரண்மனை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் அனைத்து நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது அவர்களும் பொது மக்களுக்கு இறையன்பர்களுக்கு ஏற்றார் போல் அனைத்து நடைமுறைகளும் சிறப்பாக குறைந்த கட்டணத்தில் அனைத்து விசேஷங்களையும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது தற்சமயம் அரண்மனை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர நிறுத்துமிடம் மாவட்ட நிர்வாகத்தால் சுற்றுலாத் துறைக்கு மாற்ற ஆவணம் செய்யப்பட்டுள்ளது இது பொதுமக்களுக்கும் இறை அன்பர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள் ஏனெனில் ஏற்கனவே குறைந்த கட்டணத்தில் அனைத்து விதமான சேவைகளும் அரண்மனை தேவஸ்தானத்தால் கொடுக்கப்பட்டு வருகிறது இப்படி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடைமுறைக்கு மாற்றாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பதனால் அனைத்து விதமான கட்டணங்கள் உயரவும் கட்டண கொள்ளை ஏற்படவும் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது எனவே அரண்மனை தேவஸ்தானத்தில் நிர்வாகத்தில் கீழ் இயங்கும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிட கட்டணம் வேறு ஒரு எந்த நிர்வாகத்திற்கும் மாற்றம் செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநில முதலமைச்சருக்கும் மாநில அறநிலை துறை அமைச்சருக்கும் அறநிலை துறை இயக்குநர்க்கும் பொதுமக்கள் சார்பாக தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பாக வலியுறுத்தப்படுகிறது.
இங்கனம்
வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள்
பொதுச் செயலாளர்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு