தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு மாநில மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தஞ்சை சங்கம் ஹோட்டலில் 13-12-2025 அன்று மாலை மாநிலத் தலைவர் திருமலை செந்தில் அவர்கள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேசிய தலைவர் திரு. இராமசாமி அவர்கள் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகள் நியமன கடிதங்களை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:- இந்தக் கூட்டமைப்பின் 16 வது மாநாடு தஞ்சையில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 4,300க்கும் மேற்பட்ட சிவன் கோயில்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் குத்தகை தொகை சரியாக வந்தாலே கோயிலை திறம்பட பாதுகாக்கலாம்.
கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் திரு. சந்திரபோஸ் பெருமாள், ஞானவேல் சரவணன் அமைப்பு செயலாளர் வைஜெயந்தி ராஜா, மாநில பொருளாளர் சரவண பெருமாள், மாணவரணி சிவா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மாநில பொருளாளர் வைரமுத்து, தஞ்சை மாவட்ட தலைவர் மகேந்திரன், மாநகரத் தலைவர் கே ஆர் ஜி ராஜா, பிரச்சார குழு பொதுச்செயலாளர் கரந்தை கண்ணன், பெருங்கோட்ட தலைவர் மாஸ்டர் சுரேஷ், மண்டல தலைவர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் குணசுந்தர் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.