தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பில் இணைய வழி (Google Meet)-யில் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் நிர்வாகிகள் நியமன ஆலோசனைக் கூட்டம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பில் இணைய வழி (Google Meet)-யில் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் நிர்வாகிகள் நியமன ஆலோசனைக் கூட்டம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜெயந்திராஜன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், தேசிய செயலாளர் சு.பா.ஞானசரவணவேல் அவர்களின் வழிநடத்தலுடன் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜெயந்திராஜன் அவர்களின் பரிந்துரையின் பெயரில் தமிழ்நாடு மாநில தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் T.R.S.திருமலை செந்தில், பொதுச்செயலாளர் N.T.கண்ணன், பொருளாளர் R.வைரமுத்து, ஆகியோரின் ஆலோசனையின்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் முதல்வர் பட்டிமன்ற நடுவர். எழுத்தாளர் முனைவர் பா. வேலம்மாள் அவர்களைத் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் ஒருங்கிணைந்த பெருங்கோட்ட அமைப்பாளராக 24.01.2026 அன்று நடந்த இணையவழி கூட்டத்தின் (Google Meet) மூலம் நியமனம் செய்யப்பட்டார்.
தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி.வைஜெயந்திராஜன் அவர்கள் இணைய வழி கூட்டத்தை நடத்தினார். கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊடக அணித் தலைவர் கே.பார்த்திபன் அவர்கள் செய்திருந்தார். முனைவர் வேலம்மாள் அவர்கள் இறைவணக்கம் பாடினார். பொருளாளர் வைரமுத்து அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மேலும் அவர் பேசும் போது பெண்கள் தலைமை ஏற்று வழி நடத்துவது சிறப்புக்குரியதாகும் என்றும், விரைவில் நேரடியாக கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் கூறினார். சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை வீரர் ஜெயகிந் செண்பகராமன்பிள்ளை அவர்களின் பெயரர் சென்னை முனைவர் பொ.சேதுசேஷன் அவர்களும், பெங்களூர் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் திரு.சீனி.சௌரிராஜன் அவர்களும் திருவாரூர் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் பட்டிமன்ற நடுவர் புலவர்.M.சந்திரசேகரன் அவர்களும், பெங்களூர் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் திருமதி தேன்மொழி அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
தேசிய பொதுச் செயலாளர் திரு.சந்திரபோஸ் அவர்கள் கூட்டமைப்பின் விதிமுறைகளைப் பற்றியும், நோக்கங்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேலாக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முனைவர். பா.வேலம்மாள், அவர்கள் இரண்டு மாவட்டங்களின் நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்து சிறப்பாக உரையாற்றினார். கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தின் நிர்வாகிகள் திரு.பி.கோமதிநாயகம், திரு.ரா.நாராயணன், திரு.உ.முத்தையா, திருமதி.தா.சண்முகபிரியா, திரு.வீரபுத்திரன், திரு.இ.சு.கைலாசம், திரு.ச.சங்கரசுப்பிரமணியன், திரு.செ.சந்திரமோகன் ஆகியோரையும், விருதுநர் மாவட்ட நிர்வாகிகள் திரு.முருகதாஸ், திரு.சங்கதேஸ்வரன், திரு.வெங்கடாசலம், திரு.நாராயணசாமி, திரு.எம்.முனியசாமி B.A., S.வையாலிங்கம், திரு.சுவாமிநாதன், திரு.சரவணன் B.Sc., B.L., திரு.ராஜேஸ்கண்ணன், திரு.S.சுப்பிரமணியன், திரு.பாலா, திரு.அழகு ரத்தினம் ஆகியோரையும் அறிமுகப்படுத்தினர். கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் மிகச்சிறந்த ஆளுமைகளாகவும், இறைப்பணியார்களாகவும், ஆன்மீகவாதிகளாகவும் உள்ளனர். இவர்கள் இத்திருக்கோயில்கள் கூட்டமைப்பின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் திருக்கோயில்களின் பாதுகாப்புக்கும் பக்தர்களின் நலனுக்கும் தங்கள் இணைந்து செயல்படுவோம் என்றும் உறுதியளித்தனர். நிறைவாக அனைவருக்கும் தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி.வைஜெயந்திராஜன் அவர்கள் தேசிய பொதுச்செயலாளர் அவர்களின் ஒப்புதலுடன் பெங்களூர் திரு.சீனி,சௌரிராஜன் அவர்களை தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய உயர்மட்டக்குழு ஆலோசராகவும், முனைவர் பொ.சேதுசேஷன் திருவாரூர். புலவர். திரு.மு.சந்திரசேகரன் அவர்களை மாநில உயர்மட்டக்குழு ஆலோசகராகவும், பெங்களுர் திருமதி.கவிஞர்.தேன்மொழி அவர்களை கர்நாடக மாநில அமைப்பாளராகவும் நியமனம் செய்வதாக அறிவித்தார். முனைவர்.பா.வேலம்மாள் அவர்கள் நன்றி தெரிவித்தார்.