சாமிசிலை உடைப்பு கோவை மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கண்டனம்!!!
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர். இராஜகுமார் செயலர். சுப்புலெட்சுமி இருவரும் கூட்டாக விட்டுள்ள கண்டன அறிக்கை. கோவை சின்னியம்பாளையம் அவிநாசிரோடு ஸ்ரீ பிளாக் மாரியம்மன் கோயில்வளாகத்தில் உள்ள பிள்ளையார் சிலை கேது உட்பட சுவாமிசிலைகள் சில கயவர்களால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இங்குள்ள சிலையை உடைத்த கயவர்கள் கரையாம் பாளையம் கன்னிமார் கோவிலிலும் கிலைகளை உடைத்ததுடன் வேலாயுதத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். காவல்துறை புலனாய்வு செய்து வருகின்றனர். கோவில்களில் நுழைந்து இவ்வாறு சுவாமிசிலைகளைச் சேதப்படுத்துவதுகண்டிக்கத்தக்கது.
இது போன்ற இழிசெயல்கள் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். நடந்த இச்செயலை கோவை மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது