கல்கி அவதாரம் கூறும் அஸ்வத்தாவூர்!!

0 45

வடமொழியில் அஸ்வத்த ராஜபுரம் என்றும் தமிழ் வமொழியில் அரசலூங் என் றும் வழங்கப்படும், அரச்சி மரங்கள் நிறைந்த ஊர் அரசலூர். திருச்சி மாவட்டம், தொட்டியத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந் துள்ளது. இவ்வூரில் நவநீத கிருஷ்ண பெருமாள் கோயில் கொண்டுள்ளார். இவர் கல்கி அவதாரம் எடுக்கப் போகிறார் என்ற நம்பிக்கையில் இந்த ஊரே அஸ்வத்தவூர் என அழைக்கப்பட்டு, பின்னாளில் அரசலூர் என்றாகிவிட்டதாம். என்று நிகழும் அந்த அவதாரம் என்று பக்தர்கள் பேராவலு டன் காத்திருக்கிறார்கள்.

திருப்பதி ஸ்ரீநிவாசரை குலதெய்வமாகக் கொண்ட, இவ்வூரில் வாழ்ந்த சில குடும் பத்தினர், இத்தலத்து ஸ்ரீநிவாசர் உற்சவருடன்,பிரசன்ன வெங்கடேச பெருமாளையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார் கள்.

இந்த பழமை வாய்ந்த ஆலயத்திலுள்ள மூர்த்திகள் மற்றும் சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கம் வாய்ந்தவை. ஆலய மேல் விதானத்தில் சூரியசந்திர கிரகண சுதை சிற்பங்கள் காட்சியளிக்கின் றன. உள்ளேயிருக்கும் ஒரு தூணில் பெருமாளை சேவிக் கும் தம்பதியர் சிலைகள் உள்ளன. இவர்களே இந்த ஆலயத்தை கட்டியவர்களாக இருக்கக் கூடும் என்று நம் பப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.