கொல்லிமலையில் தர்மம் நிலைக்க தீமைகளை விரட்டும் அறப்பளீஸ்வரர்!!!!
நாமரப்பிக் கொட்டதாருக் ஆம் அதிசயபூமி கொல்லி மலை. கொல்லி என்னும் சக் திமிக்க பாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மலையே கொல்லிமலை என்று அழைக்கப்படுகிறது.
இங்குஅறப்பளீஸ்வரர்என்னும்பெயரில் ஆயிரமா யிரம் ஆண்டுகளாக அருள்பாலித்துக் கொண்டி ருக்கிறது இறைவன் சிவனின் திருத்தலம். சங்க காலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும், அறமலை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அம்பலவாண கவி ராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்ப ளீஸ்வரர் சதகம் என்றநூலை இயற்றி உள்ளார். இதேபோல் தேவாரப்பாடல்க ளிலும் கொல்லிமலை குறித்த குறிப்புகள் உள்ளன.
பக்தர்கள், ஆற்று மீன்களுக்கு தேங்காய், பழம் வைத் தும், பொரி இறைத்தும் வணங்கிய பிள் னரே இறைவனை வழிபடச் செல்கின்றனர்.
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பா லிக்கும் இந்த கோயிலில் சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுவது வியப்பு. அறம் வளர்க்க, சித்தர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இருந்த இடம், காலப்போக்கில் விளைநிலமாகமாறியது. சிவலிங்கமும் மண்ணுக்குள் மறைந்து விட்டது. பிற்கா லத்தில் சிவனடியாரான விவசாயி ஒருவர்,கலப்பையால் நிலத்தை உழுதபோது சிவ
லிங்கம்தென்பட்டது.ஆனால்கலப்பைபட்டதால், லிங்கத்தின் உச்சியில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த லிங்கமே இன்றுவரை பக்தர்களுக்கு அருள்பாலித்து நிற்கிறது என்பது மூலவர் வரலாறு.
ஒரே இடத்தில் நின்று அறப்பளீஸ்வ ரர். தாயம்மை, விநாயகர், முருகன் என்று அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக தரிசிக்கலாம் என்பது சிறப்பு.இங்குள்ள அறம்வளர்த்தநாயகிசன்னதியின் முன்மண்டபத்தில் அஷ்டலட்சுமிகளுடன் கூடியஸ்ரீசக்ரயந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட்டால் லட் சுமி கடாட்சம் நிலைக் கும் என்பதும் ஐதீகம். இதே போல் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வள்ளி, தேவசேனாவு டன் முருகன், விநாயகர். காசிவிஸ்வநாதர், விசா லாட்சி, லட்சுமி, சரஸ் வதி, சண்டிகேஸ்வரர். துர்க்கை, காலபைரவர். சூரியன், சந்திரன் அருள் பாலிக்கின்றனர்.