வள்ளலார் காட்டும் வாழ்வு நெறிகள்!!

0 97

தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்று மூன்று தசொற்றொடர்களை நமக்கு வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அளித்துச் சென்றுள்ளார். ஆன்மிகவாதிகள் இதற்கு அநேகம் பொருள் சொல்லுவார்கள்

தனித்திரு என்கிற பொழுது ஒருநாள், இரு நாள், மூன்று நாள் என்று தொடர்கையில்

நம்முடைய வெறுமை நமக்குப்புலப்பட்டு குடும்பமாகவாழ்ந்தால் கிடைக்கும் நட்பு,கலந்துரையாடல், சேர்ந்துசிரித்தல், விளையாடுதல், உண்ணுதல், பொழுதுபோக்குதல் போன்றவைகளை இழந்து நிற்கிறோமே! என்ற தன்னிலை இரக்கம் தனக்குள்ளேயே ஒருவனுக்குத் தோன்றக்கூடும். எனவே அவன் சேர்ந்து வாழும் தத்துவத்தைப் போற்றுவான்.

பசிப்பிணிபோக்கியமணிமேகலை தொடங்கி அன்னதானம் செய்த அனைவரும் போற்றப்படுவதற்கு என்ன காரணம்? பசி என்ற உணர்வு மானம், குலம், கல்வி எனும் வரிசைப்படியான பத்தினையும் இழக்க வைக்கும் கொடுமையான உணர்வாகும்.

Leave A Reply

Your email address will not be published.