திருமணத்தடை நீக்கும் தேரழுந்தூர்!!!

0 54

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே, தேரழுந்தூரில் சவுந்தரநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. திருமணத்தடை நீக்கும் இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு சிவபெருமான் மேற்கு பார்த்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஊத்தவரதன் என்ற மன்னன் ஆட்சிக்குட்பட்ட தேசம் பரவலாக இருந்ததால், வானத்தேர் வாயிலாக பறந்து அரசியல் அலுவல்களை கவனித்து வந்தான். இப்படி ஒருசமயத்தில் பறக்கும் போது,வானத்தேரின் நிழல் வேதபுரீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் சந்தனாரண்யம்மீது பட்டது.இதுகண்டு வெகுண்ட குருடாழ்வார் அபாயகிருஷ்ணன் எனும் மந்திரத்தை ஜபித்து, அந்த ரதத்தின் நிழலை தன் திருப்பாத விரலால் அழுத்தவே வானத்தேர் கீழே அழுந்தி விட்டதாம். ஆகையால் இத்தலத்திற்கு தேர் அழுந்தூர் என்று பெயர் வந்தது.

சந்தன மரங்கள் நிரம்பிய ஊராகத் திகழ்வதால் சந்தனாரண்யம் என்றும் அழைக்கப்பட்டு,இப்போது தேரழந்தூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊர் இது.

தல வரலாறு

ஒருமுறை பரமேஸ்வரனும்,மகாவி ஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்துசொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில் பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வந்தது.

நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு ஆதரவாக சிவனை குறை கூறினார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார் கன்னால் கானே பார்வதி பசுவாக

யிடம் அதற்கான அருளாசி பெறலாம். பார்வதியை பசுவாக சபித்த சிவன் வருத்த மடைந்து இங்கு வந்து வேதியர்களுக்கு வேதம் சொல்லித்தந்தார். எனவே இங்குள்ள இறைவன் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

சிவனும், சக்தியும் பிரிந்துள்ள காலத்தில், உலகில் ஜீவ வாழ்க்கை ஜடவாழ்வு போல மாறி மாட்சி குறையலாயிற்று. இந்த விபரீதத்தை கண்டு மருண்டு தங்கள் தலைவனான சங்கு கருணனிடம் விபரம் அறிந்து சந்தனாரண்யத்துக்கு இந்திரன் முதலான தேவர்கள் வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.