ஆலயங்களில் அருமைத்தமிழ் வழிபாடு!!

0 79

  தமிழ்நாட்டில் தமிழில் பேச வேண்டும், தமிழில் பாட வேண்டும், தமிழ்மொழி வழியே இறைவனை வழிபட வேண்டும் என்ற நிலைக்காக அன்றாடம் மன்றாடும் அறிஞர்கள் எண்ணிக்கைகூட அருகி வருவது பரிதாபமே! உங்கள் தாய்மொழியைப் பேசுங்கள் பாடுங்கள் என்று சொல்லுகின்ற ஒரு இழிநிலை உலகத்திலேயே தமிழ்நாட்டில், தான் உள்ளது என்பதை நினைத்தாலே பொருத்த அவமானமாய் உள்ளது.

மானம் அவமானம் என்றால் என்னவென்று கேட்கின்ற சமதாயமாக இன்றைய தமிழ்ச் சமுதாயம் மாறி விட்டதே என்று கவலைப்படுவோர் பல வழிகளில் தாமொழி பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும், அத்தகைய குரல் கேட்கும் நிலை நிலை செவிடன் காதில் ஊதிய சங்குபோல் பயனற்றதாகப் போவதை என்னவென்று சொல்வது?

இத்தகைய விழிப்புணர்வு இயக்கங்களின் முயற்சிகளுக்கே முட்டுக்கட்டை போடுபவர்களும் உள்ளனர் என்பதுதான் வெட்கப்பட வேண்டியதாகும்.

இன்றைய அளவில் ஓரளவு படித்துப் பட்டம் பெற்று வேலையில் இருக்கும் கணவன் மனைவியின் கலந்துரையாடல் கூட ஆங்கிலத்தில் அமைவதைக் காண்கிறோம்.

ஏனிந்தநிலைஎன்றுகேட்டால்,எங்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயிற்சியாக இருக்குமே என்றுநாகரிகஉலகில்நடுங்காம்பதில்கூறுகின்றனர்.வீம்புக்காக அவருக்கு வேகமாகக் குத்துவிட்டால் உடனே அவர் அம்மா அல்லது அப்பா என்று தன்னையும் அறியாமல் தாய்மொழி வார்த்தையைத்தானே உதிர்க்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.