காரைக்கால் மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாதாந்திர கூட்டம்

0 123

திருச்சியில் 14.09.25, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பான காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் செயலாளர் திரு S.குமார் & இணைச் செயலாளர் திருமதி K.ரேவதி தம்பதியர் இல்லத்தில் நடைபெற்றது. இறைவாழ்த்துடன் தொடங்கிய கூட்டமானது காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் திரு. S.திருமுருகன் அவர்கள் தலைமையிலும் யூனியன் பிரதேச தலைவர் திருமதி வைஜெயந்தி ராஜன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் இரா.அசோக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட தலைவர் அவர்கள் காரைக்கால் அருள்மிகு பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தில் இறைப்பணி ஆற்றிய கூட்டமைப்பினர் அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து திருச்சியில் நடைபெற இருக்கின்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு கூட்டமைப்பு சார்பாக கலந்து கொள்ளக்கூடியவர்கள் தங்கள் இசைவை 10.09.25 க்குள் தெரிவிக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.

 

திருமதி உமா சிவகுமார், திரு கோ. சா. சுரேஷ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், திரு கோவி.ஆசைத்தம்பி அவர்கள் ஆலோசகராகவும், திரு S.குமார், திரு T.அய்யப்பன் ஆகியோர் செயலாளர்களாகவும், திருமதி R.மாரியம்மாள், திருமதி K.ரேவதி ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு யூனியன் பிரதேசத் தலைவர் நியமனம் செய்தார்.

 

புதிய பொறுப்புகளை ஏற்ற அனைவரும் இறைப் பணிக்காக அர்ப்பணிக்கும் கூட்டமைப்போடு இணைந்து செயல்படுவோம் என ஏற்புரை வழங்கினார். யூனியன் பிரதேச பொருளாளர் திரு.க.பார்த்திபன் அவர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். நிறைவாகத் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு. கோ.சா.சுரேஷ் அவர்கள் நன்றி கூறினார்.

 

இவண்,
புதுச்சேரி யூனியன் பிரதேசத் தலைவர், காரைக்கால் மாவட்டத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்,
தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பு.

Leave A Reply

Your email address will not be published.