வாழ்க்கையில் அனுபவிக்க முடியாத அளவிற்கு கஷ்டங்களை அனுபவித்து வருகிறீர்களா? திங்கட்கிழமை சிவபெருமானுக்கு இந்த முறையில் பஞ்ச தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து பாருங்கள். கஷ்டங்கள் அனைத்தும் கலைந்து போகும்.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ஒரு கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். பிறப்பு எடுத்ததே கர்ம வினையின் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது. அப்படி பார்க்கும் பொழுது எடுத்த இந்த பிறப்பில் நாம் அனுபவிக்க கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. அதனால் நம்முடைய கர்ம வினைகளை நாம் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த கர்ம வினைகளை தீர்ப்பதற்கு தான தர்மங்கள் சிறப்பானதாக திகழ்கிறது. அனைவராலும் தான தர்மங்களை செய்ய இயலாது அல்லவா? அப்படிப்பட்டவர்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு கர்ம வினைகளை தீர்க்கலாம். அதன் அடிப்படையில் செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்களை நீக்கும் பஞ்ச தீப வழிபாடு
என் மனதார யாருக்கும் எந்த கஷ்டத்தையும் தரவில்லை, ஆனால் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது என்று புலம்பக்கூடிய ஒவ்வொரு நபர்களும் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்ய அவர்களுடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. கர்ம வினைகளை அழிக்கும் தெய்வமாகத்தான் சிவபெருமான் திகழ்கிறார். அதனால் சிவ வழிபாடு நம்முடைய கர்ம வினைகளை நீக்கி மீண்டும் பிறவா நிலையை அடையச் செய்யும்.
சிவபெருமானுக்கு உரிய கிழமையாக திங்கட்கிழமை திகழ்கிறது. திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் அருகில் இருக்கக்கூடிய ராஜகோபரத்துடன் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சென்றவுடன் முதலில் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து சிவப்பெருமானை மனதார நினைத்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று குறைந்தபட்சம் 10 நிமிடமாவது வேண்ட வேண்டும். பிறகு 5 அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த ஐந்து தீபங்களுக்கும் ஏதாவது ஒரு மலரை சமர்ப்பணம் செய்ய வேண்டும். இது பஞ்சாட்சர தீபம் என்று கூறப்படுகிறது.
தீபத்தை ஏற்றி முடித்த பிறகு நேராக கருவறைக்கு செல்ல வேண்டும். கருவறைக்கு செல்லும் வழியில் இருக்கும் நந்தி பகவானை முழு மனதோடு வழிபாடு செய்துவிட்டு சிவபெருமானை தரிசனம் செய்து தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக நாம் திங்கட்கிழமை தோறும் சிவ ஆலயத்தில் பஞ்ச தீப வழிபாட்டை செய்வதன் மூலம் விரைவிலேயே நம்முடைய கர்ம வினைகள் தீரும். கர்ம வினைகள் தீருவதன் மூலம் நம் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக விலகும். மீண்டும் பிறவா நிலை உண்டாகும்.
முப்பெரும் தேவர்களுள் ஒருவராக திகழக்கூடிய சிவபெருமானை திங்கட்கிழமையில் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகும்
நற்றுணையாவது நமச்சிவாயவே