அறகண்ட நல்லூர் (திரு அறையணி நல்லூர்) முக்கண் மூர்த்தி(அதுல்ய நாதர் ) திருக்கோயில்
அறகண்ட நல்லூர் (திரு அறையணி நல்லூர்)
முக்கண் மூர்த்தி(அதுல்ய நாதர் ) திருக்கோயில்.
வழிபட்டவர்கள்.
பிரம்மன் விஷ்ணு ருத்திரன் ஆகிய மும்மூர்த்தி பிள்ளையார் முருகன் பார்வதி பாண்டவர் சப்த மாதர் மற்றும் பலர்.
அர்த்தமற்ற முறையில் அற கண்ட நல்லூர் என்று சிதைக்கப்பட்ட அறையணி நல்லூர் திருத்தலம் திருக் கோயிலூர் தொடர் வண்டி நிலையத்திற்கு அருகே உள்ளது.
கோயில் பாறைகளுக்கு இடையே பாறைகள் மீது அமைந்துள்ளது.
அறை என்றால் ஒலி என்று பொருள்.
பிரம்மன் விசுணு ருத்திரன் என்ற மூன்று மூர்த்திகளும் வேத மந்திரங்கள் ஒலிக்க லிங்கப் பரம்பொருளைப் பூசித்துத் தவம் செய்து பரமனது முக்கண் திருவுருவத்தைக் கண்ட ஊர் ஆதலால் அறை அணி நல்லூர் என்று பெயர் பெற்றது.
முன்பினார் மூவர் தாம் தொழும் முக்கண் மூர்த்தி
அறையணி நல்லூர் முக்கண் மூர்த்தி (சம்பந்தர்)
என தொழுது வழிபட்ட பிரம்மன் விஷ்ணு ருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளுக்கும் முக்கண்ணனாய்த் திருக் காட்சி தந்த முழுமுதல் கடவுளுக்கு முக்கண் மூர்த்தி, அதுல்ய நாதர் (ஈடு இணை இல்லாதவர் ஒப்பு இல்லாதவர் ) என்று திரு நாமங்கள்.
திருக்கோவிலூர் அந்த காசுர வத வீரட்டேஸ்வரர் கோயிலும் அறையணி நல்லூர் கோயிலும் நெற்றிக் கண்ணுடன் சம்பந்தப் பட்ட கோயில்கள்.
சூரிய சந்திரர்களுக்கு ஒளி வழங்கி யருளும் *பரமேசுவரனது சுடர்த் திரு விழிகளை
தட்சன் மகளாக இருந்த பராசக்தி மறைத்த போது அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கியதால் எல்லா உயிரினங்களும் துன்புற்றன.
யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான்
அம்மையே அப்பா ஒப்பிலா
(திருவாசகம்)
தாய் அவனை எவ்வுயிர்க்கும் தன் ஒப்பு இல்லா
எவ்வுயிர்க்கும்
துணையாய் நின்ற
தாயானை
(அப்பர்)
தாய் அவன் உலகுக்கு தன் ஒப்பு இலாத் தூயவன்( சம்பந்தர்)
என எல்லா உயிர்களுக்கும் ஒப்பற்ற ஒரே தாய் தந்தையாய் உலகங்களைக் காக்கும் பராபரன் நெற்றியில் நெருப்புக் கண்ணைத் தோற்றுவித்து உலகங்களுக்கு ஒளி வழங்கிக் கருணை காட்டினார்.
முக்கண்ணன் ஆகி எல்லா உலகங்களுக்கும் ஒளி வழங்கி யருளிய முழுமுதலுக்கு நெற்றிக் கண்ணன்,
நுதல் விழியன்,
கண்ணுதல் கடவுள், முச்சுடர் விழியன்,
சூரிய சந்திர அக்கினி நயனன்,
திரிலோச்சனன் என்றெல்லாம் அருள் நாமங்கள்.
ஈசன் முக்கண்ணனாக விளங்குவதைக் கூறாத இலக்கியங்களே இல்லை என்னும்படி எல்லா நூல்களிலும் ஒப்பில்லாத முக்கண் முழுமுதல் போற்றப்படுகிறார்.
ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே
(அப்பர்)
என காட்சி அருளி ஆகமம் உபதேசித்த கடவுளின் கண்களை அம்மன் மறைக்கும் சிற்பம் காஞ்சி ஏகாம்பரேசர் திருக்கோயில் தூணில் உள்ளது.
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை (திருமந்திரம்)
என உலகம் இருண்ட போது ஒளியைப் படைக்க முடியாத பிரம்மன்,
இருளிலிருந்து காக்க முடியாத திருமால்,
இருளை அழிக்க முடியாத ருத்திரன் ஆகிய மூவரும்
உலகங்களுக்கு மாபெரும் கருணையுடன் ஒளி அருளிய ஒப்பற்ற பரம சிவத்தின் முக்கண் திருக் கோலத்தைப் பூசையும்
தவமும் செய்து கண்டு களித்த தலமே அறையணி நல்லூர்.
நேர் வாசல் இல்லாமல் பக்க வாசலைக் கொண்டுள்ள கருவறைக்கும் பிரகாரத்திற்கும் நடுவே உள்ள இடைவெளியில் சண்டீசர் சந்நிதி உள்ளது.
நுழை வாசலில் துவார கணபதி துவார முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன.
நேரே நுழை வாசலுடன் உள்ள சந்நிதியில் ஆடல் நாயகன் அருள் புரிகிறார்.
எதிரே பிரகாரத்தில் நால்வர் சந்நிதி உள்ளது.
மௌன சிவமான தட்சிணா மூர்த்தியின் கீழ் நடன முத்திரை காட்டும் மூவர் அமர்ந்துள்ளனர்.
முக்கணான் மறை பாடிய முறைமையால் முனிவர் தொழ
என ஞான தட்சிணா மூர்த்தியை சம்பந்தர் போற்றுகிறார்.
திருஞான சம்பந்தர் பிரகாரத்தில் உள்ளார்.
முக்கண் மூர்த்தி திருக் கோயிலில் ஆதி அந்தம் இல்லாத அரும் பெரும் ஜோதியாய் அண்ட சராசரங்களையும் ஒளிமயம் ஆக்கிய அண்ணாமலை லிங்கப் பரம்பொருள் பெரிய தனிச் சந்நிதியில் உள்ளது.
முக்கண் மூர்த்தியை
வழிபட்ட பால முருகன் தனிச் சந்நிதியிலும்
திருமால் பூதேவி யானை லட்சுமி சப்த மாதர்கள் சனி துர்கை நாகம் ரமண மகரிஷி பிரகாரத்திலும் உள்ளனர்.
தட்ச யாகத்தில் இறந்து பார்வதியாகப் பிறந்து வளர்ந்த பின்னர் முக்கண் மூர்த்தியை வந்து வழிபட்ட எந்த வாகனமும் இல்லாத பக்தை அம்மனுக்கு சௌந்தர்ய அம்பிகை கனகாம்பிகை என்ற லட்சுமி மற்றும் ஒப்பற்ற தாயான சிவ நாமம் சூட்டிக் கற்பனைக் காளை வாகனத்துடன் தனிச் சந்நிதி மனம் போனபடி கட்டப்பட்டு உள்ளது.
பரமன் முக்கண்ணன் ஆன போது நெருப்புக் கண் கண்டே அஞ்சி விலகி வெம்மை தாங்க முடியாமல் காப்பாற்றுமாறு அம்மன் கை தொழுது போற்றி வணங்கியதை அப்பர் தேவாரம் காட்டும் போது
தற்கால நாத்திகக் கூட்டங்கள் காட்சி அருளி மறையும் ஒப்பில்லாத அப்பன் ஒப்பில்லாத அம்மை முக்கண் மூர்த்தியுடன் ஆகம விரோதமாக ,
ஜீவ ராசி வழிபாடு இல்லாத சைவ துரோகமாக சமேத உடனுறை என்று கற்பனை அம்மனைப் படைத்து வழிபட்டு *ஒப்பிலா அம்மை அதுல்ய நாதரை முக்கண் லிங்கப் பரம்பொருளை இழிவு படுத்திப் பாவம் புரிகின்றன .
எல்லா தெய்வங்களும் பகவான்களும் அம்பாள்களும் சிவ பூஜை செய்யும் பக்தர்களே ஆதலால் யாரும் எலி மயில் கருடன் சிங்கம் மாடு என்று எந்த வாகனத்திலும் கோயிலில் நுழைய முடியாது கோயிலில் இருக்க முடியாது என்ற பொது அறிவும் இல்லாமல்
எல்லோருக்கும் வாகனத்துடன் சந்நிதி கட்டி வைத்துத் திருக் கோயிலைச் சிற்பக் கூடம் ஆக்குகின்றன.
பாண்டவர்கள் பாண்டவ தீர்த்தம் உண்டாக்கி முக்கண் பரம்பொருளை வழிபட்டு நலம் அடைந்தனர்.
அறையணி நல்லூர் முக்கண் மூர்த்தியை வழிபடுவோர்க்கு நோய் மயக்கம் வெறி பாவம் துன்பம் தடுமாற்றம் அனைத்தும் தீரும், வினை மாயும்,
சிவ கதி உண்டாகும் என்று தெய்வ மழலை பேரொளிப் பெருமானின் மகிமையைப் போற்றுகிறார்.
தேவாரம் ஓதாத தமிழ் தெரியாத
நாத்திக ஜென்மங்கள்
ஆண் பெண் வழிபாடு சைவத்தில் இல்லை
சிவாலயத்தில் பிற வழிபாடு கூடாது பாவம் என்று அறியாமல்
சிவாலயம் தோறும் அம்பாள் பெருமாள் முதல் நவ கிரகம் சப்த மாதர் வரை செத்துச் சவம் ஆகும் ஆண் பெண் ஜீவ ராசி சந்நிதிகள் கட்டி வைத்துப் புனிதமான கடவுள் கோயிலை பொம்மைக் கடை ஆக்குகின்றன.
தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.
முக்கண் மூர்த்தி என்று தேவாரம் போற்றும் தமிழ்ப் பெயர் மறுக்கப்படும்..