மகா லட்சுமி சிவ பூசை செய்த தலங்கள்
சக்தி லட்சுமி சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வப் பதவியில் உள்ள தேவியர்கள் அப்பனும் அம்மையுமான பரமேஸ்வரனால் ஒவ்வொரு ஊழியிலும் படைக்கப்படும் சிவ புத்திரிகள்.
சிவ பூஜையால் எந்த ஆத்மாவும் இந்த மூன்று தேவியர் ஆகலாம்.
இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்தும் தனியாகவும் வந்து சிவ பூஜை செய்த கோயில்கள் கணக்கற்றவை.
வைதீஸ்வரன் கோயில் அருகே திரு நின்றியூர் மகா லட்சுமீஸ்வரர் கோயில்,
திருவாரூர் தியாக ராஜர் கோயில்,
நாகப்பட்டினம் அருகே திருச் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் கோயில்,
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அருகே உள்ள திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோயில் ,
திருவாரூர் அருகே திருத்தெங்கூர் வெள்ளிமலை நாதர் கோயில்,
திருப் பத்தூர் (சிரீ தளி) சிரீ தளி நாதர் கோயில்,
சிரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோயில்
மற்றும் பலப் பல தலங்கள் திருமகள் சிவ பூசை செய்து வரமும் நலமும் பெற்றவை.
திரு நின்றியூர் மகா லட்சுமீசுவரர் கோயில்.
இது வைதீசுவரன் கோயிலுக்கு அருகே உள்ளது. பெரிய லிங்கப் பரம்பொருளைப் பூசித்த லட்சுமிக்கு சங்க நிதி பதும நிதி என்ற இரண்டு அட்சய செல்வங்களை அருளிச் செல்வத்திற்கு தெய்வம் ஆக்கிய ஈசுவரனுக்கு மகா லட்சுமீசுவரர் என்று அருள் நாமம்.
தமிழ் தெரியாத நாஸ்திகப் போக்கு வரத்துத் துறை திரு நன்றியூர் என்று நெடுஞ்சாலையில் பலகை வைத்துள்ளது.
இதைக் கண்டிக்க திருத்த அங்கு உண்மையான தமிழர் பக்தர் யாரும் இல்லை.
திருவாரூர் தியாக ராஜர் கோயில் .
திரு ஈன்ற தென் பரம்பைக் குடி மேய திரு ஆலம் பொழிலானை(அப்பர்)
என தாயுமான ஈசனால் படைக்கப்பட்ட லட்சுமி சமுத்திர ராஜனுக்கு மகளாகப் பிறந்து குளம் உண்டாக்கி ஆரூரர் ஆகிய புற்றிடங்கொண்ட லிங்கப் பரம்பொருளையும் தந்தை தாய் சேய் ஆகிய மூவுருவத் தியாக ராஜரையும் பூஜித்துத் திருமாலை
மணாளனாகப் பெற்றாள்.
மன்னு மா மலராள் வழிபட்டது (சேக்கிழார்)
செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் (அப்பர்)
என்று சேக்கிழார் பெருமானும் திருநாவுக்கரசரும் போற்றுகின்றனர்.
கமலை (தாமரையாள்) என்ற லட்சுமி பூஜித்ததால் திருவாரூர் தியாக ராஜர் கோயிலுக்குக் கமலாலயம் (பூங்கோயில்) என்று பெயர்.
பிற்காலத் தற்காலப் பாவிகள் தாமரையோடு சம்பந்தமே இல்லாத பார்வதிக்கு ஏற்றிக் கூறிக் கமலாம்பாள் என்று ஒரு கற்பனை அம்மனைப் படைத்துச் சந்நிதி கட்டியது அல்லாமல்
சிவ லோக நாயகன் தந்தை தாய் சேய் ஆகிய மூன்று உருவத் தியாக ராஜர் அருகே வைத்துத் தாய்த் தியாக ராஜரை தியாக வல்லித் தியாகேசனை எல்லாம் கடந்த கடவுளை இழிவு படுத்துகின்றனர் .
திருச் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் கோயில்.
ஈசன் திருவருளால் திருமணம் ஆன பின்பு மணக் கோலத்தில் மகா விசுணுவுடன் வந்து லட்சுமி சிவ பூசை செய்த கோயில்.
இந்து அறக்கொலைத் துறை முருகன் பார்வதி என்ற தெய்வமே இல்லாத காலத்து இந்த வெண்ணெய்ப் பிரான் ஈஸ்வரன் கோயிலில் ,
முருகனுக்கு சம்பந்தமே இல்லாத சிவாலயத்தில்,
சிவத்தை மட்டுமே வழிபட்டு வேறு யாரையும் வழிபடாத நாயன்மார் கோச்செங்கணார் கட்டிய நெடு மாடக் கோயிலில்,
முருகனுக்கு சிவனே அன்னை . பார்வதியோடு ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரியாமல்
வியர்வை சிந்தும் அழுக்கு வேலனுக்கு சிங்கார வேலன் என்று பெயர் சூட்டி
நேர் வாசல் கொண்ட நடராஜர் சந்நிதியில் அவரை அகற்றி முருகனை வைத்து முருகன் கோயில் என்று கூறிப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது.
நாத்திக அரசு நாஸ்திக நிர்வாகம் சொல்லும் அனைத்தும் பக்தி விரோத நாஸ்திகமாகத் தான் இருக்கும் என்று உணராத
இந்துகள் சிந்திக்கத் தெரியாத மூளை கெட்டவர்கள் என்பதற்கு மனம் போனபடி மாற்றி அமைக்கப்பட்ட திருவாரூர் திருவொற்றியூர் தியாக ராஜர் கோயில்களும் இந்தக் கோயிலும் உதாரணம்.
சிரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோயில்:
ஆந்திரப் பிரதேசத்தில் விஜயவாடா மற்றும் ஓங்கோலுக்கு அருகே உள்ளது.
பன்னிரண்டு ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்று.
எண்ணற்ற பல பிறவிகளில் பிறந்து உழல வேண்டும் என்று துர்வாச முனிவரால் விஷ்ணு சாபம் அடைந்த போது திருமகள் பூமிக்கு வந்து மல்லிகையும் மருத மரமும் நிறைந்த மலைப் பிரதேசத்தில் மருத மரத்தடியில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து மல்லிகைப் பூவால் பூஜித்தாள்.
இதனால் மல்லிகார்ஜுனம் என்று பெயர்.
பரமேசுவரனுக்கு மல்லிகார்ஜுனர் என்று திருநாமம்.
லட்சுமிக்கு அருளிய மல்லிகார்ஜுனர் எண்ணற்ற பல பிறவி என்பதைப் பத்து பிறவியாகக் குறைத்து அருளினார்.
அந்தப் பத்தும் தொடர்ச்சியாக இல்லாமல் ஒவ்வொரு பிறவியின் முடிவிலும் விஷ்ணுவிற்கு அறக்கருணை மறக்கருணை காட்டி மீண்டும் வைகுண்ட வாழ்வை அருளிச் செய்தார். 🙏 ⚜ பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும்
என்று ஈசன் கருணையை அப்பர் போற்றுகிறார்.
சிரீ தேவி பூஜித்ததால் சிரீ சைலம் என்று பெயர்.
நான் எனது என்ற ஆணவ மலத்தால் பற்றப்பட்ட பார்வதி சிறந்த மெய்யடியாரான பிருங்கி முனிவருக்கு எலும்புக் கூடாகப் போகுமாறு சாபம் கொடுத்த பாவத்தினால் மல்லிகா என்ற வேடுவப் பெண்ணாகிப் பல காலம் சிவ பூஜை செய்து வாழ்ந்த தலம்.
பரமேசுவரன் அர்ஜுனன் என்ற வேடனாக வந்து திருமணம் செய்து கொண்டு அருளி மீண்டும் பார்வதி ஆக்கி யருளினார்.
தாதாய் மூவேழு உலகினுக்கும் தாயே
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்
(திருவாசகம் )
என ஒப்பற்ற அம்மையும் அப்பனும் ஆகிய தூய சிவ பரம்பொருளைத் தவிர எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழலிலும் செத்துப் பிறக்கும் மாசு மலம் உள்ள உயிரினங்களான ஆண் பெண் தெய்வங்களை மண்ணுலக விண்ணுலக வாசிகளைத் தொழாத சிறந்த மெய்யடியாராய் வண்டாக மாறி சிவ பரம் பொருளை வலம் வந்த பிருங்கி முனிவர் காரணமாகப் பிறவி உண்டாகி சிவ பூஜை செய்து மீண்டும் பார்வதி ஆனதால் பார்வதிக்கு பிரமராம்பிகை (வண்டு அம்மன்) என்று பெயர்.
பிரமரம் என்றால் வண்டு என்று பொருள்.
⚜ சிவன் அருளால் வினை சேரகிலாமை சிவனருள் கூடின் அச் சிவ லோகம் ஆமே (திருமந்திரம்) 💧 தண்டி குண்டோதரன் பிங்கு இருடி சார்ந்த புகழ் சங்கு கன்னன் (அப்பர்) ⚜ பிருங்கி இருடிக்கு மா வரம் ஈந்தும் (நக்கீரர்)
என சிவ பரம்பொருளை மட்டுமே வழிபடும் செம்மையான சீரிய சிவனடியார்களுக்கு யாருடைய சாபத்தாலும் எந்தக் குறைவும் உண்டாகாது ஆதலால் காரைக்கால் அம்மையார் வேண்டிப் பெற்ற எலும்பு உருவுடன் பிருங்கி முனிவர் சிவ பூஜை செய்து சிவனருளால் மீண்டும் எழில் பெற்றுப் பிறவி நீங்கி முக்தி அடைந்து *பார்வதி செல்ல முடியாத சிவலோகம் சேர்ந்து சிவ கணமாகி ஈசனுடன் நிலைபெற்ற தலம் சென்னை அருகே உள்ள பிருங்கி மலை நந்தீஸ்வரர் கோயில்.
இது பரங்கிமலை என்று சிதைத்து வழங்கப்படுகிறது.
சிவ கணமான பிருங்கி முனிவருக்குச் சந்நிதி இருக்க வேண்டிய கோயிலில் அவர் திரு உருவம் கூட இல்லை.
மாறாக அம்பாள் பசுவாகப் பிறந்த பிறவி நோய் உள்ளவளே தவிர பசுவை உடைய ஆவுடை நாயகி அல்ல ,
தாயான அன்னை பசுபதியே பசுபதீஸ்வரரே ஆவுடை நாயகி என்று தெரியாத நாத்திக நிர்வாகம்
கற்பனை அம்மன் சந்நிதியும்
மனம் போனபடி நவ கிரக தேவர் உட்பட எல்லா ஜீவ ராசிச் சந்நிதியும் கட்டி வைத்து சிவாலயத்தையும்,
மான் மழு தாங்கும் சிவ ரூபம் பெற்றவர் நந்தி என்று தெரியாமல்
மதில் சுவற்றில் பிருங்கி முனிவருக்கு ஈசன் நந்தி ரூபமாகக் காட்சி அருளிய தலம் என்று உளறிக் கட்டுக் கதை எழுதி வைத்து சிவ லோகத்து பிருங்கி முனிவரையும் நந்தி தேவரையும் இழிவுபடுத்துகிறது .
பறசலூர் (திருப் பறியலூர்) தட்ச யாக நாச வீரட்டேஸ்வரர் கோயில்.
இது மயிலாடு துறை அருகே செம்பொனார் கோயில் பக்கம் உள்ளது.
தட்சன் செய்த தீய யாகத்தில் பங்கு பெற்றதால் கால் வெட்டப்பட்ட லட்சுமி இங்கு பிற தெய்வங்களோடு வந்து வழிபட்டு உடல் ஊனம் நீங்கப் பெற்றாள்.
சென்னை அருகே பூசலார் நாயனார் தலமான திருநின்றவூர்
மற்றும் நாடு முழுவதும் பலப் பல கோயில்கள் மகா லட்சுமி சிவ பூஜை செய்து துன்பம் நீங்கி வரம் பெற்று இன்பம் அடைந்த கோயில்கள்.