GOOGLE MEET
புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமை நிர்வாகிகள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளின் இணையதள வழியாக ஆலோசனைக் கூட்டம்
அனைவருக்கும் வணக்கம். தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர், மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முனைவர் பி.இராமஸ்வாமி அவர்கள், தேசியப் பொதுச் செயலாளர் திரு.சந்திரபோஸ் பெருமாள் அவர்கள், செயலாளர் திரு.சு.பா.ஞானவேல் சரவணன் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டலுடன் நம் தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு தமிழ்நாடு புதுச்சேரி, இன்னும் ஒரு சில மாநிலங்களிலும் சிறப்பாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 08.01.2026 அன்று முதன் முதலாக நம் தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமை நிர்வாகிகள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை google மீட் வழியாக நடத்தினோம். இதற்கு திருமதி.வைஜெயந்திராஜன் அவர்கள் ஏற்பாடு செய்த போது எந்த அளவிற்கு இது செயல்படுத்த முடியும் என்கின்ற எண்ணத்துடன் தான் செயல் பாட்டில் இறங்கினேன். ஆனால் அத்தனை நிர்வாகிகளும் மூன்று நாட்களுக்குள் செய்த ஏற்பாட்டில் மிகப்பெரிய ஆர்வத்துடன் வந்து இணைந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தது மட்டுமல்லாமல் தங்களுடைய கருத்துக்களை தெளிவாகவும், ஆக்கபூர்வமாகவும் பகிர்ந்தார்கள்.
மாலை 6.30 மணிக்கு தொடங்கி 8.30 மணிக்கு முடித்தோம். நிர்வாகிகள் கொஞ்சம் கூட சுணக்கம் இன்றி, மலர்ந்த முகத்துடன் பல்வேறு அலுவல்கள் தங்களுக்கு இருந்த போதும் அந்த அலுவல்களுக்கு இடையிலும் வந்து கலந்து கொண்டார்கள்.
காரைக்கால் மாவட்ட பொதுச்செயலாளர் முனைவர்.இரா.அசோக்குமார் அவர்கள் இறைவணக்கம் பாடினார். புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுச்செயலாளர் திரு.K.விஜயராஜ் அவர்கள் கூட்டத் தீர்மானங்களை அழகாக எடுத்துரைத்து வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் மிகப்பெரிய சிறப்பாக இந்நிகழ்ச்சியில் நம்முடைய தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் அவர்கள் ஒரு அலுவலாக மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்த போதும், ஓரிடத்தில் நிறுத்திவிட்டு வந்து கலந்து கொண்டு ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளைத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டின் பொதுச் செயலாளர் திரு.N.T.கண்ணன் அவர்களை புதுச்சேரி யூனியன் பிரதேச, மாவட்டங்கள் உள்ளடங்கிய கூட்டமைப்பிற்கு பார்வையாளராக நியமனம் செய்தார். திரு.N.T.கண்ணன் மிகவும் மனமகிழ்ந்து நம் கூட்டமைப்பின் மேம்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பேன் என்று ஏற்புரை செய்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய பொருளாளராக திரு.ராகவபெருமாள்சாமி அவர்களை, பொது பொதுச் செயலாளர் கே.விஜயராஜ் அவர்களின் பரிந்துரையின் பேரில் தேசிய பொதுச்செயலாளர் முன்னிலையில், தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி.வைஜெயந்தி ராஜன் நியமனம் செய்தார்.
நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவரும் மனமகிழ்வோடு ஏற்றுக்கொண்டு ஏற்புரை அளித்தார். மேனாள் பொருளாளர், ஊடக அணி தலைவர் திரு.க.பார்த்திபன் அவர்கள் கூடுதல் பொறுப்பாக மற்றும் ஒரு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பொதுச்செயலாளர் திரு.N.S.கலை வரதன் அவர்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் அளித்துப் பேசினார்.
காரைக்கால் மாவட்ட தலைவர், வழக்கறிஞர் திருமுருகன் அவர்கள் இந்த கூகுள் மீட் நடத்துவதின் அவசியம் மற்றும் எல்லோரும் சந்திக்க கூடிய ஒரு களமாகவும் அமைந்துள்ளதாகவும் எதிர்கால செயல்பாடுகள் பற்றிப் பேசினார். புதுச்சேரி மாவட்ட பொதுச்செயலாளர் திரு.N.விஸ்வநாதன் அவர்கள் கலந்து கொண்ட அனைவரையும் அறிமுகப்படுத்தியும், செயல் திட்டங்கள் பற்றியும் பேசினார். மற்றும் யூனியன் பிரதேச துணைத் தலைவர் N.வெங்கடாசலபதி அவர்கள் ஒரு சங்கம், கூட்டமைப்பு நடத்த வேண்டும் என்றால் அதற்கு எந்த அளவிற்கு சந்தா அவசியம் என்பதையும் தெளிவுபடுத்திப் பேசினார். மேலும் இக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரு.சக்திவேலன், திரு.சிவசக்கரவர்த்தி, திரு.சுந்தரமூர்த்தி, திருமதி.விஜயலட்சுமி, திருமதி.ராணிதேவா, திரு.தங்கவேல் ஆகியோரும் முதலியார்பேட்டை மண்டலத் தலைவர் திரு.ஜெ.சங்கர், மகளிர் அணி தலைவி திருமதி.மகாலட்சுமி ஆகியோர் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வந்து சேர இருப்பதாகவும் தெரிவித்தார்கள். மாவட்ட நிர்வாகி திருமதி.சித்ரலேகா அவர்கள் அவருடைய ஆன்மீக அமைப்பில் இருந்து 25 மகளிர்கள் ஆர்வத்துடன் இணைய இருப்பதாக தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்ட பொது செயலாளர் முனைவர் அசோக் குமார் அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துப் பேசினார். காரைக்கால் மாவட்டச் செயலாளர் திரு.குமார், இணைச்செயலாளர் திருமதி.கே.ரேவதி, செயற்குழு உறுப்பினர் திருமதி.ஜோதி என்ற புஷ்பவல்லி, உழவாரப் பணிகள், முற்றோதல்கள் பற்றிப் பேசினர். மகளிர் அணித் தலைவி திருமதி.கவிதா அவர்கள் விரைவில் மகளிர் அணியில் மகளிர்கள் அதிகம் பேர் ஆர்வத்துடன் வந்து இணைய இருப்பதாகவும் தெரிவித்தார். மகளிர் அணி நிர்வாகி அபிராமி அவர்கள் தன்னுடைய தந்தையாரைப் போலவே தாணும் ஆன்மீகப் பணியில் ஆர்வத்துடன் செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தார். செயற்குழு உறுப்பினர் திரு.நாகராஜ் அவர்கள் தொடர்ந்து மாதக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்றும், அதற்கான ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். காரைக்கால் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமதி.உமா கைலாசம், நாகை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள அம்பைத் திருமாளம் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு உழவாரப்பட்ணி செய்வதற்கான அவர்கள் செயலாளர் திரு.க.பார்த்திபன் அவர்கள் விரைவில் புதுச்சேரி காரைக்கால், மாகே, ஏனாம் தொகுதிகளில் மண்டலங்கள் அமைப்பது பற்றிப் பேசினார். கூட்டத்தில் நிறைவாக அனைவரது கோரிக்கைகள், ஆலோசனைகள் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த தலைவர் திருமதி.வைஜெயந்திராஜன் அவர்கள் தேசியப் பொதுச் செயலாளர் அவர்களை கூட்டத்திலேயே கலந்து கொண்டு சிலவற்றிற்கு தீர்வுகளை அங்கேயே எடுத்துரைத்தார். சில தீர்மானங்களுக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் மாவட்ட தலைவர்களுடன் கலந்து கொண்டு விரைவில் தீர்வு காண்பதாகவும் பேசினார். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். கோவில் முரசு ஆன்லைன் வழியாக வந்து கொண்டிருக்கிறது என்பதையும், மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதையும் எடுத்துக்கூறி நாம் அவசியம் அனைவரும் சந்தாதாரர்களாக ஆவதற்கும், கட்டுரைகள் கோவில்கள் பற்றிய செய்திகள், இந்து கலாச்சாரங்கள், தர்மங்கள், இலக்கியங்கள் பற்றி எழுதுவதற்கு விருப்பமுள்ளவர்கள் முன் வர வேண்டும் என்றும் கோவில் முரசின் இணை ஆசிரியராக தன்னை நியமனம் செய்வதற்காக தேசிய பொதுச் செயலாளர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களுக்கு கூட்டமைப்பின் சார்பாக மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இணையக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய அமைப்புச் செயலாளர் மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ இந்த இணைய வழிக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இணையக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் இணைய வழியாக நிச்சயமாக எதிர்காலத்தில், வெளிநாடுகள், நம் இந்தியா முழுவதும் உள்ள மற்றும் மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களின் மீது ஈடுபாடும் நம்பிக்கையும் உள்ளவர்களை நம்மோடு இணைத்து செயல்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் நிர்வாகிகளையும் நாங்கள் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்றும், ஒரு ஆன்மீகப் பரிமாற்றம் இருக்கும் என்பதையும் தெரிவித்தனர்.
google மீட்டிற்கு தொழில்நுட்ப வசதி செய்து தந்த ஊடக அணி தலைவர் மற்றும் தனிப்பட்ட முறையில் ஊக்கப்படுத்திய அத்தனை பேருக்கும் தனிப்பட்ட முறையில் என் வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருமதி.வைஜெயந்திராஜன்,
தேசிய அமைப்புச் செயலாளர்,
தலைவர், புதுச்சேரி யூனியன் பிரதேச
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு


