யோகம் கற்போம் ஆகம் காப்போம்!

0 42

அதி வேத நூல்கள் என்று கூறப்படும் ஆஉபநிடதங்கள் இதிகாசங்களில் யோகக் கலைப் பற்றிய செய்திகள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. யோகக் கலை பரம் பொருளை அடைவதற்கு வழிவகுக்கும் முறை என்று சுவேதாஸ்வர உபநிமிடதம் கூறுகிறது என்பார். படைப்பு பற்றிய ஆதாரத்தை யோகா வாயிலாகக் காணமுடியும் என்று கடோபநிடதத்தில் அறியலாம் என்பர். முண்டக உபநிடதம் என்பது யோகக் கலையின் வகைகளைக் கூறுகிறது என்பர்.

மகாபாரதத்தில் காணப்படும் மோட்ச தருமம் என்பது யோகத்தைப் பற்றியதாகவே உள்ளது என்பர். பீஷ்மர், பிரம்மம், தருமம், தவம், உபவாசம் முதலிய யோகங்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பர்.

புத்த சமயமும், யோகத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. துறவு, தியானம் போன்றவை புத்தரே ஏற்றுக் கொண்ட யோகமுறைகள். இவை எல்லாம் விரிந்தும் பரந்தும் காணப்பட்டாலும் இந்த யோகக் கலையை ஒரு விஞ்ஞானம் (அறிவியல்) என்று உலகுக்கு எடுத்துக் காட்டியவர் பதஞ்சலி மகாமுனிவர் என்பவரே ! அவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பது பெருமைக்குரியதாகும்.

யோக முறையைச் சாதகம் செய்வோர் ஆன்மஞானம் பெறுவர். பல்வேறு வாய்ப்புக்களும் பெறுவர்; ஆனாலும் அந்த வாய்ப்பு என்பதனால், கிடைக்கும் வெற்றியில் மனத்தைப் பறிகொடுத்தால் முழுப்பயனும் அறவே நீங்கிவிடும் என்றும் எச்சரிக்கிறார் பதஞ்சலியார்.

Leave A Reply

Your email address will not be published.