கஷ்டங்கள் அனைத்தும் நீங்க மாதத்திற்கு ஒரு முறை இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்
வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்க மாதத்திற்கு ஒரு முறை இப்படி தீபம் ஏற்றி பாருங்கள். தீபத்தை போலவே பிரகாசமான வாழ்க்கையை வாழ முடியும்.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்து வருகிறோம். இதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்கள் தான். இந்த நவகிரகங்களும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் செயல்படுகிறது என்றும் கர்ம வினைகளை நாம் குறைக்க குறைக்க நவக்கிரகங்களின் பாதிப்புகளும் குறையும் என்றும் ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் தான் நமக்கு கஷ்டங்கள் உண்டாகிறது என்றும் கூறப்படுகிறது.
அதனால் பிரச்சனைகள் வருவதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது நவகிரகங்களே. இந்த நவகிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விதத்தில் மாற்றுவதாக இருந்தாலும் மாற்ற முடியும், மோசமான நிலைக்கு கொண்டு செல்வதாக இருந்தாலும் கொண்டு செல்ல முடியும். அவ்வளவு ஆற்றல் மிகுந்த நவகிரகங்களை நாம் முறையாக வழிபாடு செய்வதோடு சேர்த்து இந்த முறையில் தீபமும் ஏற்ற நவக்கிரகங்களின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகளும் கஷ்டங்களும் நீங்கும். அந்த தீபம் ஏற்றும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சிறப்பான வாழ்க்கை அமைய வழிபாடு
பிரம்மஞ்ச பேராற்றல் அதிகமாக திகழக்கூடிய நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் பௌர்ணமி. மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய பௌர்ணமி நாள் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த நாள். அன்றைய தினம் நிலவு முழு பிரகாசத்துடன் காட்சியளிக்கும். பௌர்ணமி நாளில் பலவிதமான வழிபாடுகளை செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருப்போம். அன்றைய தினம் தான் சத்திய நாராயண பூஜை என்பது நடைபெறும். பலரும் சிவபெருமானின் ஆலயத்தை சுற்றி கிரிவலம் வருவார்கள். இன்னும் சிலரோ முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். பெண் தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.
மேலும் பௌர்ணமி தினத்தில் மகாலட்சுமி மற்றும் குபேரரை பூஜை செய்வதன் மூலமும் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும். இப்படி பல விதமான பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. பலரும் அதைப் பின்பற்றி வந்திருப்போம். அதோடு சேர்த்து மிகவும் எளிமையான முறையில் நவகிரகங்களை நினைத்து ஏற்றக்கூடிய தீபம் நாம் செய்த அனைத்து விதமான வழிபாடுகளையும் பரிகாரங்களுக்கும் பலன்களை வாரி வழங்கும்.
அதனால் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி நாளில் முழு நிலவு வானத்தில் தோன்றிய பிறகு நம்முடைய வீட்டு பூஜை அறையில் இந்த தீபங்களை நாம் ஏற்ற வேண்டும். இதற்கு 9 தொன்னைகளை வாங்கிக் கொள்ளுங்கள். தொன்னை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அந்த ஒன்பது தொன்னைகளையும் வரிசையாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேர்கோட்டில் பிறகு ஒவ்வொரு தொன்னையிலும் ஒவ்வொரு நவகிரகங்களின் தானியத்தை சேர்க்க வேண்டும். ஒரு கைப்பிடி அளவு சேர்த்தால் கூட போதும்.

கோதுமை, நெல், துவரம் பருப்பு, பச்சைப்பயிறு, கருப்பு கொண்டை கடலை, வெள்ளை மொச்சை, கருப்பு எள், கருப்பு உளுந்து, கொள்ளு என்று ஒன்பது தொன்னைகளிலும் 9 தானியங்களை போட்டுக் கொள்ளுங்கள். இந்த ஒன்பது தானியங்களுக்கு மேல் ஒன்பது அகல் விளக்குகளை வைத்து அதில் நெய், நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் இந்த மூன்று எண்ணெய்களில் ஏதாவது ஒரு எண்ணையை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பு வேண்டும் என்னும் பட்சத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் உகந்த நிறத்தில் திரியை தயார் செய்து போட்டு ஏற்றும் பொழுது அதீத பலம் கிடைக்கும்.
இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் 2 மணி நேரம் வரை எரிய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நவக்கிரக தானியங்களை வைத்து அதில் தீபமேற்றி நவகிரகங்களை மனதார நினைத்து அதில் தீபமேற்றி வழிபாடு செய்பவர்களுக்கு நவகிரகங்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் படிப்படியாக நீங்கும்.
எளிமையான இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு செய்பவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை சிறப்பானதாக மாறும்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!