பொன்னேரியில் உள்ள சிவன் கோயில் திருப்பணிக்கு இடையூறாக உள்ள கழிப்பறை சுற்றுச்சுவரை அகற்ற தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

0 242

பொன்னேரி ஸ்ரீ அகஸ்த்தீஸ்வர் கோயில் திருப்பணிக்கு இடையூறாக உள்ள கழிப்பறை சுற்றுச்சுவரை அகற்ற தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
பொன்னேரியில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் சோழ மன்னர்களால் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகவும் சிவபெருமானால் ஏற்பட்ட சாபம் நீங்க பார்வதி தேவி இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு சாப விமோசன பெற்றதாகவும் கூறப்பட்டு வருகிறது தற்போது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலை புனரமைக்கவும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்நிலையில் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை பொன்னேரி நகராட்சி நிர்வாகம் அத்திமீரி ஆக்கிரமித்து பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி திருப்பணிக்கு இடையூறாக கழிப்பிடம் கட்டி திருப்பணி நடைபெற தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இடைஞ்சலாக உள்ளனர்
இதனால் ஆலய வெளிப்புற சுற்றுச் சுவர் அமைக்கும் திருப்பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அத்துமீறி ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பிட சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தி விட்டு திருப்பணிக்கு உதவுமாறு திருக்கோயில் சார்பாக தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் திருப்பணிக்கு இடையூறாக ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கழிப்பறை சுற்றுச்சுவரை அகற்ற தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவும் உள்ளது என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது இங்கனம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு

Leave A Reply

Your email address will not be published.