காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை
காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை
பௌர்ணமி
பௌர்ணமி என்பது ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் ஒரு சிறப்பு வாய்ந்த நாள்.
பௌர்ணமி என்பது சந்திரன் முழுமையாக ஒளிரும் நாள்.
இந்த நாளில், சூரியனும், சந்திரனும் பூமிக்கு எதிரெதிர் திசையில் இருக்கும்.
பௌர்ணமி, மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது.
பல கலாச்சாரங்களில் இது கொண்டாடப்படுகிறது.
பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
பௌர்ணமி ஏன் முக்கியமானது?
பௌர்ணமி, இந்து மதத்தில் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.
இந்த நாளில், பல ஆன்மீகச் செயல்கள், தெய்வீகப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
பௌர்ணமி, நமக்கு இயற்கையுடன் இணைந்து வாழும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
சித்தர் பெருமக்களின் ஜீவ பீடங்களில் பௌர்ணமி பூஜை
சித்தர் பெருமக்களின் ஜீவ பீடத்தில் நாம் செய்யும் பௌர்ணமி பூஜை ஆனது நினைத்த காரியம் நிறைவேறும்
பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் பல வகையான மன நிறைவு, மகிழ்ச்சி மற்றும் நன்மைகளைப் பெற உதவுகின்றன.
இந்த பௌர்ணமி பூஜை குடும்ப நலன், மகிழ்ச்சி, ஆரோக்கியம் என்பவற்றை நல்கும்
பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் வேள்விக்கு நாம் ஒரு உபயதாரராகவோ அல்லது அந்த வேள்விக்கு நம்மாளான பொருட்களை வாங்கி வழங்குவது குடும்பத்தில் மகிழ்ச்சி, மன நிம்மதியை அதிகரிக்கும்.
பௌர்ணமி பூஜை தொடர்ந்து செய்து வரப் பொருளாதார வளம் மற்றும் குடும்ப நலத்தை உயர்த்தும். வேள்வியில் பங்குபெறும் குழந்தைகளுக்கான கல்வி செல்வத்தை வழங்கு.
சித்தர்களின் ஜீவ பீடத்தில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டு நாம் பங்குபெறும் சித்தர் பீடத்தில் உள்ள சித்தரின் பெயரினை 108 முறை உச்சரிப்பது அல்லது ஒரு சீட்டில் 108 முறை அந்த சித்தரின் பெயரை எழுதி வருவதும் ஆன்ம சாந்தி மற்றும் மனக்கவலைகளை அகற்றுவதற்கான வழி என்றும் நம்பப்படுகிறது.
அத்துடன் அங்கு நடைபெறும் அன்னதானத்தில் கலந்து கொண்டு வரும் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்குவது நம் வாழ்வை மேன்மை அடைய செய்வது உடன் நம் தலைமுறை கடந்தும் பூர்வ ஜென்ம புண்ணியமாக காத்து நிற்கும்
பௌர்ணமி தினத்தில் பொருள் கடன் வாங்கல் மற்றும் கொடுப்பது தவிர்க்க வேண்டும்.
பெளர்ணமி தினத்தில் செய்யப்படும் பூஜைகள் ஆன்மீக மகிழ்ச்சி, செல்வ வளம் மற்றும் குடும்ப நலன்களை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.