மதம் பிடித்த மதத்தினர் !!!

0 40

மதங்களைத் தோற்றுவிக்கையில் அவர்கள் அனைவரும் எளிமையானவர்களாய் எல்லோர்க்கும் எளிதில் துணை நிற்பவர்களாய் இருந்திருக்கின்றனர்.

 மதத்தின் பெயரால் பொருளைச் சேகரிப்பதை அவர்கள் விரும்பியதில்லை. சாதாரண மனச் சபலங்கள் சிற்றின்பவாழ்வுக்கு அடிமையாதல் வேண்டாம் என்கின்றனர். தன்னலமற்ற, மற்ற பொதுநல நோக்குடன் அனைவரிடத்திம் அன்பு, கருணை காட்டுபவர்களாய் மனித வாழ்வு அமைய வேண்டும்என்றுதான் அவர்கள் கூறிச்சென்றார்கள். அன்பின் வழியதே உயிர்நலை என்றனர்.

ஆனால் தற்காலத்தில் உள்ள அந்த அந்த மதத்தலைவர்கள் தங்களிடத்தில் அகப்பட்ட செல்வங்களை தம் முக்கிய வாழ்வாகக் கொண்டு, விலைமதிப்பற்ற உடைகளிலும் தங்கச் சங்கிலிகளில் கோர்க்கப்பட்ட சிவன் திருமால், முருகன், சிலுவை, 786 எனச் செலவு செய்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துபவராய் உள்ளனர். நமக்கு இத்தகைய வாழ்வைத் தந்த தமது முன்னோடிகளின் நிறுவனர்களின் பெயர்களை மட்டும் நாவால் உச்சரிப்பவர்களாக தன்னைக் காட்டிக் கொண்டு, மத நிறுவனர்களின் நோக்கங் களுக்கு முற்றிலும் மாறாக தன்னை மட்டுமே பின்பற்றுவோராக ஒரு கூட்டத்தை அல்லது அதிகாரம் பெற்றகுழுவைத் தன்னகத்தே உருவாக்கிக் கொள்கின்றனர். ஸ்பெயின் நாட்டின் மூன்றில் ஒரு பாகம் நிலப்பரப்பு மாதா கோவிலுக்குச் சொந்தமாக உள்ளது என்பர்.

Leave A Reply

Your email address will not be published.