வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்

0 206

ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்

(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.

(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.

(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.

(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு.

(5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும் .

6) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(7) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(8) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

( வேண்டியதை வேண்டியவாறு அடைய அபிராமி அந்தாதி )

பவளக்கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

Leave A Reply

Your email address will not be published.