மகாளய பட்சத்தில் வரும் மிகவும் விசேஷமான மகா பரணி
ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மூன்றும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது.
பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது
மகாளயம்’ என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் காலமே. மகாளய பட்சம் ஆகும்
மேலும், 15 நாட்கள் தொடர்ந்து தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் கூட மகாபரணி அன்று மட்டுமாவது எள்ளும் தண்ணீரும் இறைத்து தரப்பணம் செய்தால் புண்ணிய பலன்கள் நிச்சயமாகக் கிட்டும்.
முக்கியமாக மகாபரணி அன்று கொடுக்கும் தர்ப்பணத்தால் குடும்பத்தில் துர்மரணம் அடைந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைவதால், பித்ரு தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.
மகா பரணி வரும் வெள்ளிக்கிழமை 12.09.2025 வருகிறது
மகா பரணி நாளில் வீட்டில் உயரமான பகுதியில் யமதீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் புண்ணிய பலன்களைக் கொடுக்கும்.
இது நம் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், நமக்கும் நம் அந்திம காலம் வரை மரண பயம் இல்லாமல் இருக்கும்.
யம தீபத்தை நம் வீட்டு மாடியில் ஒரு அகல் விளக்கில் முடிந்தால் தாமரைத் தண்டால் ஆன திரியையிட்டு ஏற்றி வைக்கலாம்.
வசதியில்லாதவர்கள் அவர்கள் வீட்டு பூஜையறையிலேயே தனியாக ஒரு அகல் விளக்கை ஏற்றலாம். இதனால் யமதர்மராஜன் மிக்க மகிழ்ச்சியடைவார்.
குடும்பத்தில் துர்மரணம் சம்பவிக்காது. யாருக்கும் மரண பயம் ஏற்படாது. அனைவரும் நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் எல்லா நலன்களையும் பெற்று வாழ்வர்.
மகா பரணி அன்று செய்யும் தானம் தர்மங்களும் மிகுந்த நற்பலனைக் கொடுக்கும்.
யம தீபம் ஏற்றும்போது கூற வேண்டிய ஸ்லோகம்
‘ஸ்ரீ யமாய நம: யமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:’
எனும் ஸ்லோகத்தை இந்த யம தீபம் ஏற்றும்போது சொல்லி வழிபடுவது சிறப்பு