நாளை(9-9-2025)(999) பிரபஞ்ச வசிய நாள் பரிகாரம்!
நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் நாள்தோறும் நம்மை விடாமல் துரத்திக் கொண்டே தான் இருக்கிறது.
இருந்தாலும் மீதம் இருக்கும் வாழ்க்கையை நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம்.
நம்மை துரத்தும் விடாப்படியான பிரச்சினைகளிலிருந்து விடுபட, சில சக்தி வாய்ந்த நாட்களை கடவுள் நமக்கு கொடுக்கின்றான்.
அந்த வரிசையில் நாளை அதிசக்தி வாய்ந்த பிரபஞ்ச வசிய நாள் வரவிருக்கிறது.
இந்த நாளைப் பற்றிய சிறப்பு என்ன?இந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய பரிகார முறைகள் என்ன? இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பிரபஞ்ச வசிய நாள் சிறப்பு
நாளை 9ஆம் தேதி, 9ஆம் மாதம், 2025 இன் கூட்டுத் தொகை 9. ஆக மொத்தம் 999. அது மட்டுமில்லாமல் கிரகங்களில் செவ்வாய் பகவானை குறிக்கக் கூடியதும் 9 என்ற
எண் தான்.
இன்றைய காலகட்டத்தில் பணம், கடன் என்று சிக்கித் தவிக்க கூடிய பிரச்சினைகளுக்கு காரணம் செவ்வாய் பகவான்.
திருமணத்தடைக்கு காரணமும் செவ்வாய் பகவான் தான்.
செவ்வாய் பகவானுக்கு உரிய, செவ்வாய்க்கிழமையில் 999 இந்த வசிய நாள் வந்திருப்பது அதிசிறப்பு.
இந்த செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகப் பெருமான்.
இதை இந்த இடத்தில் நினைவு கூறுவது ரொம்ப ரொம்ப அவசியம்.
இந்த நாளில் என்ன பரிகாரம் செய்தால் நம்முடைய பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். –
999 பிரபஞ்ச வசிய நாள் பரிகாரம் நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து கல்லுப்பு போட்ட தண்ணீரில் சுத்த பத்தமாக குளித்து விடுங்கள்.
அந்த நிமிடமே உங்களை பிடித்த பீடை ஒழிந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒன்பது முறை தண்ணீரை தலையில் ஊற்றி குளிக்கலாம்.
பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
செவ்வாய்க்கு உகந்த நிறம் சிவப்பு. முடிந்தால் சிவப்பு நிற ஆடையை நாளைய தினம் அணிந்து கொள்வது நல்லது.
சிவப்பு நிறபேனா அல்லது ஸ்கெட்ச் ஏதாவது ஒன்று தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளை நிற காகிதத்தில் முதலில் சிவப்பு குங்குமப்பொட்டு வைத்துவிட்டு, பிறகு உங்களுடைய ஒரு கோரிக்கையை சிவப்பு நிற பேனாவில் அந்த வெள்ளை காகிதத்தில்
9 முறை எழுதுங்கள்.
உங்களுடைய மனதில் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் ஆசை, அல்லது நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சி செய்து உங்கள் கைக்கு கிடைக்காத விஷயங்கள், நீண்ட நாட்களாக உங்களை தொடரும் கடன் பிரச்சனை, இப்படி எது இருந்தாலும் சரி, அந்த காகிதத்தில் அந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்று
9 முறை எழுதி விடுங்கள்.
பிறகு அந்த காகிதத்தை நான்காக மடித்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு
இந்தப் பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைக்க வேண்டும்.
உங்கள் வேண்டுதலை ஒன்பது முறை பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள்.
உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.
5 லட்சம் கடன் சுமையிலிருந்து சீக்கிரம் விடுபட வேண்டும்.
திருமணம் நடக்க வேண்டும்.
குழந்தை பேரு கிடைக்க வேண்டும்.
ஆரோக்கியம் பெற வேண்டும் என்று, என்ன கோரிக்கையை வேண்டும் என்றாலும் இந்த நேரத்தில் நீங்கள் வைக்கலாம்.
நாளை செவ்வாய்க்கிழமை என்பதால் முருகன் கோவிலுக்கு செல்லலாம் வேண்டுதல் நிறைவேற முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபாடும் செய்யலாம்.
பரிகாரத்தை செய்ய வேண்டிய நேரம் நாளை 9.9.2025, காலை 9:00 டு 9:09 மணிவரை அல்லது இரவு 9:00 டு 9:09 இடைப்பட்ட இந்த ஒன்பது நிமிடத்தில் மேலே சொன்ன வேண்டுதலை பிரபஞ்சத்திடம் வைப்பது அதிசிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி