குலதெய்வ வழிபாட்டின் குறுக்கே நிற்பதேன்?

0 55

ராமேஸ்வரம் தீவில் பன்னெடுங்காலமாகக் Sகுடியமர்ந்து வருபவர்கள் தங்கள் குல தெய்வமாக இராமநாத சுவாமியைத்தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது வாழ்வியல் பண்டிகை தினங்களில் முழு உரிமையுடன் சென்று வழிபட்ட பாதையே அண்மைக்காலத்தில் வி.ஐ.பி. க்கள் செல்லும் பாதையாக மாற்றப்பட்டது.

 

இந்த நிகழ்வுநூறாண்டுகளுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு எந்த இடையறும்இல்லாமல்நடைபெற்று வந்தது.

இந்நிலையில் உள்ளூர் மக்கள் தங்கள் குல தெய்வத்தை வழிபட ரூ.200 செலுத்த வேண்டும் என்று அறநிலையத்துறைகட்டாயப்படுத்தி வசூல் செய்துவருவதாகசெய்திகள்.

 

தொடர்ந்து வசூல் பிரச்சனை தொடர்வதால் உள்ளூர் பக்தர்கள், பொது நல நோக்கினர் அரசியல் கட்சி யினர், சமுதாய அமைப்புச் சங்கங்கள் அனைவரும் ஒன்றுகூடி கோவிலின் பக்க வாட்டு வாசல்வழியாக கோயில் நுழைவு போராட்டத்தைக் கையிலெடுத்து 500க்கு மேற்பட்டவர் ஒன்று திரண்டனர். இதைக்காவல் துறையினர் தடுத்து நிறுத்திய தோடு 500க்கும் மேற்பட்டவர்களைக்கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை என்றபெயரில் பெரும்பான்மையான பெரிய கோவில்களில் எல்லாம் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பார்களே அந்த வகையில் பக்தர்களை நிம்மதியாகச் இறைவழிபாட்டில் கவனம் செலுத்த விடாமல் சிரமப்படுத்துகிறார்கள் அந்தக் கயவர்கள் கூட்டத்தைக் கண்டு கொள்ளாமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவோர் மற்றும் கோவிலில் சிறப்பு தரிசனம் ஏஜெண்டுகளாகக் இருந்து பணக்காரர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் அடாத செயலும் நடைபெறுவதாக தினம் தினம் புகார்கள் வருகின்றன.

இந்தநிலைநீடித்திட ஒருஅறநிலையத்துறை அவசியம்தானா? என்றகேள்விபொதுவாக எழுந்துவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.