வீடு, நிலம் சம்பந்தமான நீண்டகால சிக்கல்களுக்கு சுமுகமான தீர்வினை காண இத்தல தரணிபீட தேவியை நம்பிக்கையுடன் வழிபடுதல் நிச்சயம் நன்மை பயக்குமாம்

0 80

வீடு, நிலம் சம்பந்தமான
நீண்டகால சிக்கல்களுக்கு
சுமுகமான தீர்வினை காண இத்தல தரணிபீட தேவியை நம்பிக்கையுடன் வழிபடுதல் நிச்சயம் நன்மை பயக்குமாம்

சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்:

பிரசித்தி பெற்ற குற்றாலம் அருவியின் அருகே அமைந்துள்ள மிகவும் தொன்மையான ஸ்ரீ திருக்குற்றாலநாத சுவாமி ஆலயத்தினுள் மூலவர் சன்னதியின் வடதிசையில் உள்ள தனி சன்னதியில் நம் தாட்சாயணி அம்மன், ஸ்ரீ திரிகூடப்பராசக்தி எனும் திருப்பெயரில் பூமியின் ரூபமாக,ஸ்ரீ சக்ர அமைப்பில்
அருள்புரிவதைக் காணப்பரவசம்.

ஒரு புராண வரலாற்று நிகழ்விபடி; அக்காலத்தில் அகண்ட பாரதமாக விளங்கிய இம்மண்ணில் அமையப்பெற்ற 51சக்தி பீடங்களில், 18 பீடங்கள் நமது தமிழகத்தில் உள்ளன.  அதில் 10-வது பீடமாக விளங்கிடும் இத்திருத்தலத்தினை
‘யோக பீடம்’ என்றும்,
‘பூமி பீடம்” என்றும்,
‘தரணி பீடம்’ என்றும் கூறுவர்.

(வீடு, நிலம் சம்பந்தமான நீண்டகால சிக்கல்களுக்கு சுமுகமான தீர்வினை காண இத்தல தரணிபீட தேவியை நம்பிக்கையுடன் வழிபடுதல் நிச்சயம் நன்மை பயக்குமாம்)

தேவர்களாலும், முனிவர்களாலும் வழிபடப்பட்ட இந்த பீடம், ஒன்பது அம்பிகையின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். எனவே, ஒவ்வொரு பவுர்ணமியன்று இரவினில் இப்பீடத்திற்கு நடைபெறும் நவசக்தி பூஜை வெகு விசேஷமாம்.

பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
பன்னீர், குங்கும அர்ச்சனை செய்து உளமார வழிபட எண்ணியது ஈடேறும் என்பது நம்பிக்கை).

ஓம் சக்தி பராசக்தி:

தரணி பீட தேவி வழிபாட்டு மந்திரம்

ஓம் தாராயை வித்மஹேமஹோக்ர தாராயை தீமஹிதந்நோ தேவீ ப்ரசோதயாத்.!

Leave A Reply

Your email address will not be published.