தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன இந்திரன் சிலை!

அரசு பதிலளிக்க நீதிமன்ற உத்தரவு.

0 90

தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன இந்திரன் சிலை!

அரசு பதிலளிக்க நீதிமன்ற உத்தரவு.

தஞ்சை பெரிய கோயிலில் மாயமான இந்திரன் சிலையை கண்டுபிடித்து மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திரு அழகர்சாமி பாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், “உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இருந்த பழங்கால இந்திரன் சிலை மாயமாகியுள்ளது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சிலையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள்,இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விரிவான விளக்கங்களுடன் கூடிய பதில் மனுவைத் (Counter Affidavit) தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

விசாரணை ஒத்திவைப்பு:
அரசு தரப்பு விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 18-ஆம் தேதிக்கு (18.06.2026) ஒத்திவைத்து ஆணையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.