தடையில்லா வருமானம் பெற பனிரெண்டு இராசி அன்பர்களும் செய்யவேண்டிய பரிகாரம்

12 ராசிகளுக்குரிய அதிர்ஷ்ட மந்திரங்கள் மேஷம் ஓம் ஐம் க்லீம் சௌம். ரிஷபம் ஓம் ஐம் க்லீம் மிதுனம் ஓம் க்லீம் ஐம் சௌம் கடகம் ஓம் ஐம் க்லீம் சிம்மம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கன்னி ஓம் ஸ்ரீம் ஐம் துலாம் ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் விருச்சிகம் ஓம் க்லீம் சௌம் தனுசு ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம் மகரம் ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் கும்பம் ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம் மீனம் ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

0 95

மேஷம்

செவ்வாய் கிழமைகளில் சிவன்கோயில் சென்று அபிசேக பொருட்களை வழங்குவதன் மூலம் பணத்தடைகள் நீங்கும்..வருவாய் பெருகும்

ரிஷபம்

வெளியில் வேலைக்கு செல்லும் போது பசுமாடுக்கு தீவனம் உதாரணமாக வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும்…வருவாய் தடை நீங்கி செல்வசெழிப்பு ஏற்படும்

மிதுனம்

அடிக்கடி பெருமாள் கோயில் சென்று பச்சைப்பயிறு தானம் செய்தும் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் மஞ்சள் குங்கு மம் தந்து வழியனுப்பி வைப்பதும் பணவரவு தடையை நீக்கி தாரள பணப்புழக்கத்தை ஏற்படுத்தும்

கடகம்

இவர்கள் வசிக்கும் வீட்டின் வெளிப்புறங்களில் மொட்டை மாடியில் வாய் அகன்ற பாத்திரத்தை நீருற்றி வைத்து பறவைகள் அருந்தும்படி செய்ய..பறவைகள் தாகம் தீர்வது போல இவர்கள் பணப்பிரச்சனை தீரும்…திங்கட்கிழமை மாலை சிவன் கோயில் சென்று பால் அபிசேகம் செய்ய வருமானம் சிறக்கும்

சிம்மம்

இவர்கள் தூங்கும் தலைக்கு அருகில் செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தில் நீர் நிரப்பி வைத்து தூங்கி் மறுநாள் காலை அந்த நீரை வீட்டின் கிழக்கு பகுதியில் தெளிக்க பணத்தடை நீங்கும் கிழக்கு பகுதியில் செடிகள் இருந்தால் அதன் மேல் தெளிப்பது நல்ல பலன் தரும்

கன்னி

புதன்கிழமைகளில் பச்சை ஆடை உடுத்துவது பணதடையை நீக்கும்..பச்சை நிறக் கைக் குட்டையையாவது அன்று பயன்படுத்துவது நல்லது . திங்கட்கிழமைகளில் பசுமாட்டுக்கு வெல்லம் கலந்த கோதுமை மாவை தருவது பணவரவை அதிகப்படுத்தும.

துலாம்

அபிசேக பிரியர் சிவபெருமானுக்கு திங்கட்கிழமைகளில் இளநீர் பசும்பால் பன்னீர் கொண்டு சிவபெருமானை அபிசேகம் செய்துவர பணவரவு அதிகமாகும் சேமிப்பும் உயரும்

விருச்சிகம்

சஷ்டி திதிகளில் முருகப்பெருமானுக்கு அபிசேகப் பொருட்கள் வழங்கி கடலை பருப்பு நைவேத்தியம் செய்து வணங்கிவர பணவருவாயில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கி தாராளமான பணவரவு ஏற்படும்

தனுசு

வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் ஆடை அணிந்து விஷ்ணு சகஸ்ரநாம ம் படிப்பதும் படிக்க இயலாதவர்கள் அதனை ஒலிக்க செய்து பின்னர் ஐந்துமுக விளக்கில் தாமரைத் தண்டுதிரி போட்டு்நெய் விளக்கேற்றிவர வருவாய் தடை விலகும்…எதிரிகள் தொல்லை அகன்று வருமானம் பெருகும்

மகரம்

இவர்கள் துளசி செடி வளர்ப்பது யோகம் தரும். துளசி செடி முன்பு சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வருவாய் தடை நீங்கும்

துளசி்செடி இல்லாதவர்கள் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம்..நல்ல வருவாய் கிட்டும்

கும்பம்

சனிக்கிழமைகளில் நவக்கிரக சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நேராக நில்லாமல் சாய்வாக நின்று வணங்கிவர வருமான தடை நீங்கி செல்வ வளம் பெறலாம்

மீனம்

வியாழக்கிழமைகளில் மஞ்சள் ஆடை அணிந்து் மஞ்சள்நிற பண்டங்களை நைவேத்தியம் செய்து தட்சிணாமூர்த்தியை வணங்கிவர வருமான தடை அகன்று வளமான வாழ்வு பெறலாம்….

12 ராசிகளுக்குரிய அதிர்ஷ்ட மந்திரங்கள்

மேஷம் ஓம் ஐம் க்லீம் சௌம்.
ரிஷபம் ஓம் ஐம் க்லீம்
மிதுனம் ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம் ஓம் ஐம் க்லீம்
சிம்மம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
கன்னி ஓம் ஸ்ரீம் ஐம்
துலாம் ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் விருச்சிகம் ஓம் க்லீம் சௌம்
தனுசு ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
மகரம் ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
கும்பம் ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மீனம் ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

Leave A Reply

Your email address will not be published.