கணவன்-மனைவி ஓயாத சண்டை தீர சக்திவாய்ந்த ஆன்மீக பரிகாரம்

"கற்பூர கௌரம் கருணாவதாரம்சம்சார சாரம் புஜகேந்திரஹாரம்சதா வசந்தம் ஹிருதயாரவிந்தேபவம் பவானி சகிதம் நமாமி"!

0 68

கணவன்-மனைவி ஓயாத சண்டை தீர சக்திவாய்ந்த ஆன்மீக பரிகாரம்

வீட்டில் நிம்மதி, சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அவசியம். ஆனால் பல வீடுகளில் எப்போதும் கணவன்-மனைவிக்குள் புரிதல் இன்றி சண்டை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் பிரிந்து வாழ்பவர்களும் அதிகம். இப்படி கணவன்-மனைவி பிரச்சனையால் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் ஒரு எளிமையான வழிபாட்டினை வீட்டில் இருந்து செய்து வந்தாலே போதும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

கணவன்-மனைவிக்குள் சண்டைகள், கோபங்கள் வருவது அனைத்து வீடுகளிலும் நடக்கும் சாதாரண நிகழ்வு தான். அது ஏதாவது காரணத்திற்காக வந்தால் சரி. ஆனால் சில வீடுகளில் காரணமே இல்லாமல் சண்டை வந்து கொண்டே இருக்கும்.

காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை தொட்டது அனைத்திற்கும் சண்டை நடக்கும். எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்தால் கூட ஏதாவது ஒரு வழியில் சண்டை வந்து விடும். இப்படி கணவன்-மனைவிக்கு எப்போதும் சண்டை ஏற்படுவதால் வீட்டில் நிம்மதி இல்லாத நிலை ஏற்படும்.

இந்த நிலை சரியாக ஒரு எளிமையான ஆன்மீக பரிகாரம் அல்லது வழிபாட்டினை செய்தாலே போதும்.

திங்கட்கிழமை, பெளர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டினை செய்வது மிகவும் சிறப்பானதாகும். வழிபாடு செய்யும் நாளில் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பூஜை அறையில் அமர்ந்து, அர்த்தநாரீஸ்வரர் மந்திரத்தை 9 அல்லது 27 முறை உச்சரித்து வழிபட வேண்டும்.

அர்த்தநாரீஸ்வரர் மந்திரம் :

“ஓம் ஹூம் ஜம் சஹ அர்த்தநாரீஸ்வர
ரூபே ஹரீம் ஸ்வாஹா”

கணவன்-மனைவிக்கு இடையே உள்ள சண்டை, சச்சரவுகள் நீங்கி, ஒற்றுமையை அதிகரிக்க உதவும் சக்திவாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வந்தால், தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்பட்டு, விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்மை உண்டாகும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை நினைத்து, அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிப்பது சிறப்பான பலனை தரும்.

அர்த்தநாரீஸ்வரர் யார்?

சிவன் பாதி, சக்தி பாதி என இணைந்ஐ ஒரே திருவுருவமாக காட்சி தரும் கோலத்திற்கு அர்த்தநாரீஸ்வரர் கோலம் என்று பெயர். இது சிவபெருமானின் 64 திருவுருவங்களில் ஒன்று. ஒரு பாதி ஆணாகவும், மறுபாதி பெண்ணாகவும் காட்சி தரும் இவரை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை சிறக்கும். ஒருமுறை பிருங்கி முனிவர் பார்வதியை வழிபட மறுத்து, சிவனை மட்டுமே வழிபட்டு சென்றார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, சிவனை எப்போதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்ற வரத்தை பெறுவதற்காக கடுமையான தவம் புரிந்தார். அன்னையின் கடுமையான தவத்திற்கு இறங்கிய சிவபெருமான், தனது உடலின் இடபாகத்தில் அன்னைக்கு இடம் அளித்தார். சிவனும், சக்தியும் ஒன்று தான். அது போல் ஆணும்-பெண்ணும் சமம் என்பதை புரிய வைப்பதற்காக இந்த திருவிளையாடலை சிவபெருமான் நிகழ்த்தினார். அதே வடிவத்தில் திருச்செங்கோடு மலை மீது சுயம்பு மூர்த்தியாக அர்த்தநாரீஸ்வரர் உறைந்தார்.

தனது கணவனை எப்போதும் பிரியாமல், இணைந்தே இருக்க வேண்டும் என்பதற்காக அன்னை பார்வதி தேவி, தவம் இருந்த பெற்ற வரம் என்பதால் சிவனையும், பார்வதியும் ஒரே உருவமாக இணைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரரை மனதார வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். கணவன்-மனைவிக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். கணவனும் மனைவியும் எப்போதும் இணை பிரியாமல் வாழும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவபெருமானுக்குரிய திங்கட்கிழமை, பெளர்ணமி நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது அதிக பலனை தரும் என சொல்லப்படுகிறது.

அர்த்தநாரீஸ்வரர் ஸ்தோத்திர மந்திரம்

“கற்பூர கௌரம் கருணாவதாரம்சம்சார சாரம் புஜகேந்திரஹாரம்சதா வசந்தம் ஹிருதயாரவிந்தேபவம் பவானி சகிதம் நமாமி”!

Leave A Reply

Your email address will not be published.