சாஸ்திர ரீதியாக குடும்பத்தில் இறந்தவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு?

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ!

0 85

சாஸ்திர ரீதியாக
குடும்பத்தில் இறந்தவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு?

குடும்பத்தில் எவரேனும் இறந்துவிட்டால்
ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது ” -மூடநம்பிக்கை தொடர்பாக விளக்கங்கள்

தவறான வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் …!

எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு …வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது .

இறப்பு நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது .

இடைச் செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்களை ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல்தடுப்பதோடு ,
அக்குடும்பத்தினருக்கு எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தினரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்துவிடும் !

இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .

அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , சினிமா , செய்தித்தாள் படித்தல் , புது ஆடைகள் , ஸ்வீட்டுகள் , காபி , டீ , ருசிகர உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ?

இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று தடை விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் !

துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும் கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , ” ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது ” என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .

உறவினரின் இறப்புத் தீட்டை எத்தனை நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும்?

ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள் இறந்தால் இறந்தவருடன் ஏற்பட்ட உறவின் நெருக்கத்துக்குத்தக்ககாக தீட்டு காக்க வேண்டிய நாட்கள் தர்ம சாஸ்திரத்தில் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது, மிகவும் நெருங்கிய உறவினரான சித்தப்பா, பெரியப்பா, தாயார், தந்தை, அப்பப்பா (தந்தையின் தந்தை) போன்றவர்கள் இறந்தால் அவர்கள் இறந்த நாள் முதல் பத்துநாட்கள் முடியும் வரையில் இறந்தவரின் ரத்த சம்பந்தம் இருப்பதால் மேற்கூறிய உறவினரின் உடலில் ஒருவிதமான தீட்டு ஏற்படும். ஆகவே, மேற்கூறிய உறவினர்கள் இறக்கும்போது பத்து நாட்கள் தீட்டு அனுசரிக்க வேண்டும். நெருங்கிய உறவினராக அல்லாமல், சற்று தூரத்து உறவினர்களான அம்மப்பா (தாயின் தந்தை) அம்மம்மா (தாயின் தாயார்), மாமா, மாமி முதலானவர்கள் இறந்தால் இறந்த நாள் முதல் மூன்று நாட்கள் முடியும் வரையில் தீட்டு காக்க வேண்டும்.

மிகவும் தூரத்து சம்பந்த உறவினர்கள் இறந்தால், அதாவது தாத்தா, பாட்டிக்கும் மேற்பட்ட முன் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இறந்தால் ஒன்றரை நாள் அல்லது ஒரு நாள் மட்டுமே தீட்டு காத்தால் போதும். என்ன உறவு என்றே தெரியாது. ஆனாலும், குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் தூரத்து உறவினர் என்று கருதப்படும் ஒருவர் இறந்தால் அவருக்காக தலை முழுகி ஸ்நானம் செய்தால் மட்டும் போதும். இவ்வாறு ஒருவர் இறந்ததற்காக மற்றவர் தீட்டு காப்பதால், இறந்தவர் இவ்வுலகில் வாழ வேண்டிய காலத்தில் அவரால் வாழ முடியாமல் பாக்கி இருக்கும் அவரது ஆயுள் தீட்டு, காப்பவருக்கு வந்து சேரும். தீட்டுக் காப்பவரின் ஆயுள் அதிகரிக்கும் என்கிறது. தர்மசாஸ்திரம். இவ்வாறு இறந்ததற்காக தீட்டுக் காக்கும் நாட்களில் கோயில்களுக்குக் செல்வதோ வீட்டில் பூஜை செய்வதோ, ஜபம், ஹோமம் போன்றவற்றில் கலந்து கொள்வதோ, தீட்டில்லாத (பூஜை ஜபம் ஹோமம் பாராயணத்தில் ஈடுபட்டுள்ள) மற்றவருடன் கலப்பதோ செய்யக்கூடாது.

Leave A Reply

Your email address will not be published.