வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் கிராமத்தில் ஸ்ரீ வண்டமர் கருந்தாழ்குழலி உடனாய ஸ்ரீ அக்னிபுரிஸ்வர் சுவாமி சிவாலயம் மிக சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது
வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் கிராமத்தில் ஸ்ரீ வண்டமர் கருந்தாழ்குழலி உடனாய ஸ்ரீ அக்னிபுரிஸ்வர் சுவாமி சிவாலயம் மிக சிறப்பாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த ஆலயத்தை வேதை மண்டல தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் மகளிர் அணி தலைவர் உஷாராணி தர்மலிங்கம் அவர்களின் முழு ஏற்பாட்டில் வேதைமண்டல ஆலோசகர் எழுத்தர் ஆயை சந்திரசேகரன் மாமா அவர்களின் மேற்பார்வையிலும் நாகை மாவட்ட தலைவர் N.T. கண்ணன் அவர்களின் ஒத்துழைப்போடும் மேலும் தென்னம்புலம் கிராமத்தை சார்ந்த நமது கூட்டமைப்பின் நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்போடு தகட்டூர் தமிழ்தாசன் அவர்களின் தலைமையில் தமிழ் முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டு கும்பாபிஷேகமானது 04.09. 2025 அன்று நான்கு கால வேள்வியுடன் மிக சிறப்பாக நடைபெற்றது .

இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நாகை மாவட்ட தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பினுடைய நிர்வாகிகளுக்கும் தென்னம்புலம் கிராம மக்களுக்கும் ஈசனின் அருள் பெற்று வளமோடு வாழ பிரார்த்திக்கின்றோம். 🙏🏾🙏🏾🙏🏾தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு பெருங்கோட்ட தலைவர் N.T. கண்ணன். நாகை மாவட்டம்.