முன்னறிவிப்பு இன்றி இடிக்கப்பட்ட மலைக்கோவிலை உடனே பாலாளையம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

0 316

திருப்பூர் மாவட்டம் மங்களம் அரசு பள்ளி அருகில் சிறிய மலை மீது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த மாதேச லிங்கம் கோயில் இருந்தது இத்திருக்கோயிலில் பிரதோஷம் அம்மாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறி சிவபெருமானை வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் மங்கலம் மலை கோவில் மிகவும் பழமை வாய்ந்தது மலை மீது சிவபெருமான் அருள் பாலிப்பது எங்கும் இல்லாத சிறப்பு இத்திருக்கோயிலில் இப்படி சிறப்பு வாய்ந்த திருக்கோயிலை முறையாக பராமரிக்காமல் அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் பாழ்படுத்தி வருகின்றது.

Hill temple demolished without warning

கோவில் முன் மண்டபம் கரையான் அரித்து சேதம் அடைந்துள்ளது கோவிலை பாதுகாக்க அறநிலைத்துறை தவறிவிட்டது பல ஆண்டுகளாக பராமரிக்காமல் உள்ள இத்திருக்கோவில் எந்தவித முன்னறிவிப்பு இன்றி திடீரென மாயமாகி உள்ளது அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

Hill temple demolished without warning

கோவில் பூசாரியை கேட்டால் புனரமைப்பதற்க்காக கோயிலை இடித்து அகற்றப்பட்டதாக கூறுகிறார் அப்படி புனரமைப்பதற்காக இடிக்கப்பட்டு இருந்தால் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பாலாலயம் செய்திருக்க வேண்டும் அது மாதிரி எதுவும் செய்யாமல் கோயிலை அகற்றியதற்கு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

இது போன்ற செயலை தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது மேலும் உடனே இத்திருக்கோவில் எழுப்புவதற்கான அனைத்து வேலைப்பாட்டினை இந்து அறநிலைத்துறை உடனடியாக செய்ய வேண்டும் என கோரிக்கையும் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.