அக்னி நட்சத்திரம் வரலாறு
*காண்டவவனத்தை எரித்த அந்த 21 நாட்களே "அக்னி நக்ஷ்சத்திரம் " என்கிறது புராணம்!* 🙏🙏
*அக்னி நக்ஷ்சத்திரம் யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர் “காண்டவவனம்”. இந்திரனின் பாதுகாப்பில் உள்ள இவ்வனத்தில் அரிய மூலிகைகள் செழித்து வளர அவ்வப்போது மழை பெய்யச் செய்தான் இந்திரன்!
ஒருநாள் கண்ணன், அர்ஜுனன் மற்றும் தோழர்களுடன் யமுனை நதியில் நீராடிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த பிராஹ்மணன் ஒருவர், “இவ்வனத்தில் என் பசியைத் தீர்க்கும் மருந்து உள்ளது, நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க உதவ வேண்டும்” என்று வேண்டினார்!
பிராஹ்மணனை உற்று நோக்கிய கண்ணன், அக்னி தேவனே ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே உன் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே? என்றதும்.. வேடத்தைக் கலைத்த அக்னி தேவன், பரமாத்மாவே! “சுவேதசி என்ற மன்னனுக்காக பல ஆண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார் துர்வாச முனிவர். யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானேன்..
அதனால் மந்தநோய் என்னை தாக்கிவிட்டது. அந்நோய்க்கான மூலிகைகள் இவ்வனத்தில் உள்ளன, அதை உட்கொள்ள என் பிணி தீரும். நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்கும் போதெல்லாம், மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்கினை அணையும்படி செய்கின்றான் இந்திரன்” என்றார் அக்னி தேவன்!..
நீராட வந்திருக்கும் எங்களிட்ம் எந்த ஆயுதங்களும் இல்லையே என அர்ஜுனன் கூற, உடன் அர்ஜுனனுக்காக சக்திவாய்ந்த காண்டீப வில், அம்புகள் மற்றும் அம்புறாத்தூணி என அனைத்தையும் அளித்தார் அக்னி பகவான்!..
ப்போது கண்ணன், அக்னியிடம் “உன் பசிப்பிணியை தீர்த்துக்கொள்ள 21 நாட்கள் மட்டுமே இக்காட்டிற்குள் நீ பிரவேசிக்கலாம்; அச்சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்!..
சரி என, கண்ணனை துதித்து வனத்திற்குள் அக்னி தேவன் நுழைய, உடன் இந்திரன் மழை பெய்ய காளமேகத்திற்கு உத்தரவிட்டான்…
வானில் மேகங்கள் கூட்டமாக வருவதைக் கண்ட அர்ஜுனன், தன்னிடம் உள்ள அம்புகளால் சரக்கூடு ஒன்றை அமைத்து மழையைத் தடுத்தான்!…
அக்னியும் முதல் ஏழு நாட்கள் வனத்தில் உள்ள மூலிகையை உண்ண;
அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரியவகை மரங்களை உட்கொள்ள;
கடைசி ஏழு நாட்கள் மிதமாக உண்டு,
(மொத்தம் 21நாட்கள்) இறுதியில் இருவரிடமும் விடைபெற்றான் அக்னி தேவன்!”
*காண்டவவனத்தை எரித்த அந்த 21 நாட்களே “அக்னி நக்ஷ்சத்திரம் ” என்கிறது புராணம்!*
🙏🙏