காரைக்கால் மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

0 147

அன்பிற்கினிய கூட்டமைப்பினர் அனைவருக்கும் வணக்கம்

காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் சண்முகா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இறைவாழ்த்துடன் தொடங்கிய கூட்டமானது காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் திரு. S.திருமுருகன் அவர்கள் தலைமையிலும் மூத்த ஆலோசகர் திருக்கே தண்டாயுதபாணி பத்தர், சண்முகா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் திரு. கனகசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் இரா.அசோக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

காரைக்கால் மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவரும் காரைக்கால் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருமாகிய வழக்கறிஞர் திரு. எஸ்.திருமுருகன் அவர்கள் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் விதிமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து பேசிய புதுச்சேரி யூனியன் பிரதேச தலைவர் திருமதி வைஜெயந்தி ராஜன் அவர்கள், தேசிய அமைப்புச் செயலாளராக கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டதைப் பாராட்டி அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோயில்களின் பட்டியலை துறைசார்ந்த அதிகாரிகளிடம் பெறுவது எனவும், வழிபாடுகள் இல்லாத திருக்கோயில்களை கணக்கெடுத்து சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Karaikal District National Temple Federation Consultative Meeting

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதலமடைந்த வழிபாடற்ற நிலையில் உள்ள கல்வெட்டு தலமான மாதூரில் அமைந்துள்ள மாதேஸ்வரர் ஆலயத்தை கூட்டமைப்பினர் சென்று பார்த்து தரவுகளை சேகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர், திருக்கோயில்களின் அதிகாரி ஆகியோரை சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் உழவார பணி செய்யும் குழுவினர்களையும் வழிபாடுகள் நிகழ்த்தும் குழுக்களையும் சந்தித்து அவர்களுடன் இணைந்து திருக்கோயில்களுக்கான திருப்பணிகளை செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து மகளிர் அணி தலைவர் திருமதி கவிதா, செயலாளர் திரு எஸ் குமார், மாவட்ட ஊடக அணி தலைவர் எல் நாராயணசாமி மற்றும் பொறுப்பாளர் பக்கிரி சாமி ஆகியோருக்கு சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிறைவாக பொருளாளர் இள விஷ்ணுவர்தன் நன்றி கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணைத் தலைவர்கள் திருமதி உமா சிவக்குமார் திரு கோ. சா. சுரேஷ் , செயலாளர் எஸ் குமார் இணைச் செயலாளர் திருமதி ரேவதி திருமதி மாரியம்மாள், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி புஷ்பவல்லி கே டி பரமசிவம் மாநில பொறுப்பாளரும் ஊடக அணி தலைவர் ஆகிய க. பார்த்திபன் மாநில செயலாளர் ராம்ஜி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவண்,
மாவட்டத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்,
காரைக்கால் மாவட்டத் தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பு

Leave A Reply

Your email address will not be published.