நாகை மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் கீழையூர் பெருமாள் கோவிலில் நடைபெற்றது 

0 213

கீழையூர் ஸ்ரீ ஷேஷ சயன ரங்கநாத பெருமாள் சன்னதியில் இன்று மாலை 5 மணி அளவில் நாகை மாவட்ட தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்வேளூர் மண்டல தலைவர் நிர்வாகிகள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு நமது கூட்டமைப்பில் ஜெ. கவிதா மற்றும் இந்திராணி ஆகியோர் சிறப்பான முற்றோதல்களை கீழையூர் பகுதி மக்களுக்கு சேவையாக செய்து வருகின்றனர் .

Naga District National Temple Federation Consultative Meeting held at Keezhayur Perumal Temple

 

அவர்கள் நமது கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளனர் . மேலும் காமேஸ்வரம் பெ. பத்மநாதன் ஐயா அவர்களும் நமது கூட்டமைப்போடு இணைந்துள்ளார் .

விரைவிலே நிர்வாகிகள் நியமித்து கீழையூர் பகுதியில் திருமுறை முற்றோதல் மற்றும் திருப்பாவை திருவெம்பாவை பயிற்சி வகுப்புகளும் துவங்குவது என தீர்மானிக்கப்பட்டது .

Keezhayur Perumal Temple

இதில் கலந்துகொண்ட நாகை மாவட்ட பிரச்சார குழு தலைவர் S.கண்ணன் ஐயா , வேதை மண்டல ஆலோசகர் அமிர்தலிங்கம் ஐயா , கீழையூர் அமைப்பாளர் ஹரி கிருஷ்ணன் ஐயா , திருப்பூண்டி பொறுப்பாளர் பார்த்தசாரதி ஐயா , கீழ்வேளூர் அமைப்பாளர் செந்தில் ஐயா ஆகியோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இறைவனின் அருளைப் பெற வேண்டுகிறோம்.

தலைவர் Rtn.N.T. கண்ணன் .

நாகை மாவட்டம்.

Leave A Reply

Your email address will not be published.