திருச்செந்தூர் கோயிலில் ரூபாய் 500 பிரேக் தரிசன அமல் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கண்டனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விசேஷ நாட்கள் விடுமுறை நாட்கள் திருவிழா நாட்களை தவிர்த்து சாதாரண நாட்கள் கூட முருக பக்தர்கள் கூட்டம் சென்ற வண்ணம் உள்ளார்கள் இக்கோயிலில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனமாக ரூபாய் 100 கட்டண தரிசன வழிகளில் தற்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
இந்நிலையில் இத்திருக் கோயிலில் ரூபாய் 500 கட்டணத்தில் பிரேக் தரிசனம் என்ற ஒன்றை புதிதாக அமல்படுத்த உத்தேசித்து அறிவிப்பானையை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதில் தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு எண் 206 ல் பக்தர்கள் பெருவாரியாக வரும் திருக்கோயில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசன வசதி அதாவது பிரேக் தரிசனம் ஏற்படுத்தப்படும் என அறநிலைத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதலில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை திருவிழா மற்றும் விசேஷ நாட்களை தவிர்த்து பக்தர் ஒருவருக்கு ரூபாய் 500 கட்டண சீட்டில் இடைநிறுத்த தரிசனம் அதாவது பிரேக் தரிசனம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது இதில் தைப்பூசம் ஐந்து நாள் மாசி திருவிழா பத்து நாள் பங்குனி உத்திர திருவிழா மூன்று நாள் சித்திரை வருடப்பிறப்பு ஒரு நாள் வைகாசி விசாகம் 5 நாள் ஆவணி திருவிழா 5 நாள் நவராத்திரி உற்சவம் ஐந்து நாள் கந்த சஷ்டி திருவிழா பத்து நாள் அம்மாவாசை பௌர்ணமி வருடத்திற்கு 24 நாட்கள் என மொத்தம் 68 நாட்களும் நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் இதர நாட்களில் பிரேக் தரிசனம் கிடையாது எனவும் அவர்களது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு கண்துடைப்பாக கருத்து கேட்போம் நடைபெற்றுள்ளது இது குறித்து கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பக்தர்களிடையே பெரும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர் தினமும் பக்தர்கள் கோயில் உண்டில்களில் செலுத்தும் காணிக்கை கோடிக்கணக்கில் வருவாய் வந்து கொண்டிருக்கிறது இதில் கட்டணம் உயர்வு என்பது பக்தர்களை உயர்வு தாழ்வு என பிரித்து பார்க்கும் ஒரு அவல நிலை ஏற்படும் எனவே அருளத்துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் இது போன்ற கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது என பக்தர்கள் சார்பாகவும் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது
இங்கனம்
சந்திர போஸ் பெருமாள்
வழக்கறிஞர்
பொதுச் செயலாளர் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு