புதுச்சேரி மாநில,காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் குடமுழுக்குக்கு யாகசாலைக்கான திரவிய பொருட்கள் அளிக்கப்பட்டது
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின்தேசிய அமைப்புச் செயலாளரும், புதுச்சேரி மாநிலத் தலைவருமான வைஜெயந்தி ராஜன் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.சந்திரபோஸ் பெருமாள் அவர்கள் மற்றும் தேசிய செயலாளர் சு.ப.ஞான சரவணவேல் அவர்கள் வழிகாட்டுதலுடன் காரைக்கால் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் எஸ். திருமுருகன் அவர்கள் தலைமையில் நமது புதுச்சேரி மாநில, காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பாக அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயில் வழியாக கொடுக்கப்பட்டுள்ள யாகசாலை பூஜைக்கு தேவையான பொருட்கள் ஆலய நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் காரைக்கால் மாவட்டப் பொதுச் செயலாளர் முனைவர் இரா.அசோக் குமார் அவர்கள் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் செயலாளர்கள் குமார், அய்யப்பன் இணைச் செயலாளர்கள், திருமதி ரேவதி குமார், கல்யாணி என்ற மாரியம்மாள், மகளிர் அணித் தலைவர் கவிதா, செயலாளர்கள், திருமதிஅபிராமி, திருமதி செல்வராணி, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி என்ற புஷ்பா, திரு நாகராஜ் , மற்றும் புதிய உறுப்பினரான திரு. கணேஷ் குடும்பத்தார், ஆகியோரும் உடனிருந்தனர்.