செவ்வாய் தோஷம் நிவர்த்தி அளிக்கும் சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் என்ற மங்களநாதர் கோவில்

திசையவர் தொழுதுஎழு சிறுகுடி மேவிய தசமுகன் உரம்நெரித் தீரே, தசமுகன் உரம்நெரித் தீர்,உமைச் சார்பவர் வசைஅறும் அதுவழி பாடே.!

0 45

செவ்வாய் தோஷம் நிவர்த்தி அளிக்கும்
சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் என்ற மங்களநாதர் கோவில்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள தேவாரத் தலம் சிறுகுடி.

தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 123 வது தேவாரத்தலம் ஆகும்.

இறைவன் திருநாமம் சூட்சுமபுரீஸ்வரர். அம்பாள் மங்களாம்பிகை, தன் திருக்கரங்களால் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இது.

இந்தத் தலத்து இறைவனை மங்களன் என்னும் செவ்வாய் வழிபட்டதால், இறைவனுக்கு மங்களநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. அதனால், இந்தக் கோவில், செவ்வாய் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கின்றது.

ஒருமுறை கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில் பார்வதி பெற்றி பெற்ற பிறகு சிவபெருமான் மறைந்து திருவிளையாடல் செய்தார், கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள்.

அம்பாளுக்கு சிவபெருமான காட்சி கொடுத்து ஏற்றுக்கொண்டதாக தல புராணம் கூறுகிறது. கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு ‘சிறுபிடி’ என்று பெயர்.

அது மருவி தற்போது, ‘சிறுகுடி’ என்று அழைக்கப்படுகிறது. மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள்.

மணலால் பிடித்த லிங்கம் என்பதால், அபிஷேகம் செய்வதில்லை. மாறாக புனுகு சாத்துவதே வழக்கமாக இருக்கிறது. சிவலிங்கத்தின் நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. இறைவனை அம்பிகை ஆலிங்கனம் செய்துகொண்டதால் இத்தழும்புகள் உண்டானது.

செவ்வாய் பகவான் வந்து வணங்கி விமோசனம் பெற்றதால், செவ்வாய் தோஷம் உள்ளவருக்கு நிவர்த்தி தரும் தலமாக விளங்குகின்றது. தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, அருள்தரும் மங்களநாதராக ஈசன் இருக்கிறார்.

செவ்வாய்தோஷம் உடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம்.

மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவசியம் வந்து வணங்கவேண்டிய கோயில் இது.

திசையவர் தொழுதுஎழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரம்நெரித் தீரே,
தசமுகன் உரம்நெரித் தீர்,உமைச் சார்பவர்
வசைஅறும் அதுவழி பாடே.!

Leave A Reply

Your email address will not be published.